Newskadai.com
தமிழ்நாடு

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

Share this:

அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பாலையா(வயது 45). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். பாலையாவிற்கும், அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் சுப்பிரமணி (57), அவருடைய மகன் விக்னேஷ் (28), பாலையாவின் தம்பியின் மருமகனான கொடிவேல் கிராமத்தை சேர்ந்த வீரமணி (30) ஆகியோர், பாலையாவிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் ஈட்டியால் பாலையாவின் கழுத்தில் குத்தினர்.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி போலீஸார் பாலையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வீரமணி, விக்னேஷ், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அறந்தாங்கி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

THAVAMANI NATARAJAN

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களே உஷார்… கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI