Newskadai.com
அரசியல் இந்தியா உலகம் தமிழ்நாடு

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

oxygen cylinders
Share this:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் இறக்குமதியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்வதிலும் அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக நெதர்லாந்து நாடு தமிழகத்திற்கு ஆக்சிஜனை அனுப்பி உள்ளது. நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலமாக ஆக்சிஜன் சென்னை வந்தடைந்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரயோஜெனிக் கண்டெய்னர் மூலமாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிங்கப்பூரில் இருந்து 500 சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு 480-ல் இருந்து 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 440 மெட்ரிக் டன்னில் இருந்து 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது.

இதில் தமிழகத்துக்கு மத்திய அரசு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்தது. இதன் அளவை அதிகப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக மத்திய அரசின் ஒதுக்கீடாக 419 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!

AMARA

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

எங்க ஜாதி பெயரை கெடுக்கிறீங்களா?… ராஜகோபாலன் தப்ப செய்யலைன்னு நிரூபிக்கப்பட்டால்… சவால் விடும் மதுவந்தி…!

AMARA

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர்..! நடந்தது என்ன..?

MANIMARAN M