Newskadai.com
தமிழ்நாடு

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தில் சிகிச்சை – கோவையில் புதிய முயற்சி

Share this:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் 2ம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பி வழிவதால், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேஜிஐஎஸ்எல், தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் சேவா கேஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த பேருந்தை தயாரித்து அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தியுள்ளன. ஒரு பேருந்தில் ஆக்சிஜன் தேவைப்படும் 12 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 2 பேருந்துகளிலும் 24 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் 6 பெரிய வடிவிலான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களின் இந்த சேவை கொரோனா நோயாளிகளுக்கு பலனளிக்கும்படியாக உள்ளது.


Share this:

Related posts

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

கொரோனா குறைந்தாலும் அலட்சியம் வேண்டாம்… மத்திய, மாநில அரசுகளை அலார்ட் செய்த ஐகோர்ட்…!

NEWSKADAI