Newskadai.com
தமிழ்நாடு

மீண்டு(ம்) வந்தது கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை… தமிழகத்தில் தொடங்கியது ஆய்வு…!!

Covshield
Share this:

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்து 2ம் கட்ட ஆராய்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்த நிலையில், 2 ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முறை பல நாடுகளில் நடந்துவருகிறது.

Covshield

சென்னை அரசு பொது மருத்துவமனை, பேரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை மருத்துவமனையில் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு கோவிஷீல்டு மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

Covshield

தற்போது மீண்டும் பரிசோதனையை தொடங்க ஆக்ஸ்போர்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பரிசோதனையை தொடங்க கடந்த வாரம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் 300 தன்னார்வளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த அனுமதி பெறப்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதல்கட்டமாக நேற்று 2 தன்னார்வளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டது.


Share this:

Related posts

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

அக்.31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… தடைகளும் தளர்வுகளும்…!!!

MANIMARAN M

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M