Newskadai.com
உலகம்

சிங்கப்பூரில் ஆட்குறைப்பின் எதிரொலி… வேலையில்லாமல் நாடு திரும்பும் இந்தியர்கள்…

Share this:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சிங்கப்பூரில் பல தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனால் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் கூறியுள்ளதாவது, சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையினால் அதிகமான இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்புகின்றனர். கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது மத்திய அரசு.

இதன் மூலம் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப தினமும் ஏறக்குறைய 100 இந்தியர்கள் தூதரகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். சிங்கப்பூரில் வேலையிழப்பின் காரணமாகவும், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காவும் இந்த திட்டத்தின் கீழ் தற்போது 11,000 பேர் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர் என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் வேலையிழப்புகள் அதிகமானால் அங்கு பணியில் இருக்கும் தமிழக பணியாளர்களே பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Share this:

Related posts

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

பண மழையாய் மாறிய ‘கல்’ மழை… விசித்திர கற்களால் அடித்தது யோகம்…!!

THAVAMANI NATARAJAN

முற்றும் அமெரிக்கா – சீனா பனிப்போர்… தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு…!

NEWSKADAI

நண்பர்களிடையே சமரசம்… கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!

MANIMARAN M