Newskadai.com
அரசியல்

“இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை”… பேரவையில் உறுதி அளித்த முதல்வர்…!!

Share this:

சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தின் நிலைபாடுபற்றி கேள்வி எழுப்பினார், அதில், “தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. மும்மொழித் திட்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது, அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

மழலையர் பருவத்தில் முறை சார்ந்த கல்வி என்பது குழந்தைகளின் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்குப் புறம்பானது. 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, பிளஸ் 2 கல்விமுறையில் மாற்றம் என்பது, தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் கல்விமுறையைச் சீர்குலைப்பது ஆகும். குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கூறினார். ஆனால், சுகாதாரத் துறையின் சார்பில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் தாவரங்களின் பெயர்கள் எல்லாம் ஹிந்தியில் வரிசைப்படுத்திப் போடப்பட்டுள்ளன. இது மும்மொழித் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா, இல்லையா? எனவே, தேசிய புதியக் கல்விக் கொள்கை குறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும்.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “இருமொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. தாவரங்களின் பெயர் ஹிந்தியில் இடம்பெற்ற புத்தகம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டதாகும்.

தமிழகத்தில் உள்ள மூலிகைகளை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்காகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் புத்தகத்தை அரசின் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அண்ணா எதிர்த்தார். அதைத் தொடர்ந்து இருமொழிக் கொள்கைக்கு நேரு உறுதி கொடுத்தார். அதிமுகவும் சரி, அரசும் சரி இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்” என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

“ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்”… தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அறிக்கை…!

AMARA

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சமூக விரோதிகள்…!

AMARA