Newskadai.com
அரசியல்

ஓ.பி.எஸ். முகமூடியுடன் குவியும் தொண்டர்கள்… இ.பி.எஸ்.க்கு ஆதரவாக முழக்கம்…. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு…!

Share this:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக இ.பி.எஸ்., ஓபிஎஸ் என இரட்டை தலைமை இருப்பதால் யார் அடுத்த முதலமைச்சர் என்ற குழப்பமும், சசிகலா விடுதலை, வழிகாட்டுதல் குழு பிரச்சனை என பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்த பிரச்சனைகள் குறித்து அண்மையில் நடைபெற அதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ADMK

இதையடுத்து அன்றைய தினம் இரவே கூடிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்தனர். இதையடுத்து இன்று இன்னும் சற்று நேரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில் ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ள ஏராளமான தொண்டர்கள் ஓ.பி.எஸ். முகமூடி அணிந்து வந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏராளமான தொண்டர்கள் பதாகைகளுடன் வந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். ஆளுயர மாலை அணிவித்து, கையில் வாள் கொடுத்து வரவேற்றனர். அம்மாவின் ஆசிப்பெற்ற என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பட்டன.


Share this:

Related posts

மாணவர் நலனுக்காக “ஸ்டாலின்” எடுத்த அதிரடி முடிவு… நாளை தயாராக இருக்க “உடன்பிறப்புகளுக்கு” உத்தரவு…!!

MANIMARAN M

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA