1995-ல் பாட்ஷா பட விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து முதன் முதலில் பேசினார். கடந்த சில வருடங்களாக தமிழருவிமணியன் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து பேசி வந்தார். அதற்கான ஒரு மாநாடும் திருச்சியில் நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு கராத்தே தியாகராஜன் வரும் நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க:http://*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!
இதற்கு வழிவகுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க:http://“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக கப்சிப்பென்று இருந்த தமிழருவி மணியன் திடீரென்று மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, ரஜினிகாந்த் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து நான் விலகியதாக வெளிவரும் செய்தி தவறானது. ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும், மூன்று நாட்களுக்கு முன்புகூட ரஜினியை சந்தித்து அரசியல் குறித்துப் பேசினேன்” என்று கூறியுள்ளார்.