Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

Share this:

தமிழக பாஜகவின் லேட்டஸ்ட் அறிவிப்பு : “தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது, தேசிய கட்சியாகிய பாஜக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம், எங்கள் தலைமையை ஏற்று எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி, இனி பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைப்பெறும்”. என்று தமிழக பாஜக துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

கடைநிலை அதிமுக தொண்டனை கூட கோபம் கொள்ளச்செய்யும் அறிவிப்பு இது. அடுத்த முதல்வர் யார்? என்ற சர்ச்சையில் உள்ள அதிமுக அமைச்சர்கள் பாஜகவின் இந்த அறிவிப்பை கண்டுகொண்டதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக, எஜமானன் தோரணையில் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. அதிமுகவும் அடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறது. சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கமுடியாமல் அதிமுக அரசு தவித்து வருகிறது.

மேலும் படிக்க:http://எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

இது நாள் வரை தமிழகம், திமுக vs அதிமுக என்ற நிலையில் தான் தேர்தல் களத்தைச் சந்தித்து வந்துள்ளது. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் மறைவிற்குப் பிறகு தமிழகம் சந்திக்கவிருக்கும் 2021 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 2021-தமிழகத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவும் என்ற எதிர்ப்பார்ப்பில் அரசியல் கட்சிகள் இருந்து வரும் நிலையில், பாஜக வின் நிலைப்பாடு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக் காத்த அஇஅதிமுக கட்சியில் கூட்டணி வைத்துக் கொள்வதற்கும், ஒரு சில எம்.எல்.ஏ, எம்.பி. சீட்டிற்காகவும் போயஸ் தோட்டத்தில் தேசிய கட்சிகள் தவம் கிடந்த வரலாறை தமிழகம் அறியும். அதிமுக தொண்டர்களின் பலம், இரட்டை இலை சின்னத்தின் பலம் என்ன என்பது எதிர்க்கட்சியான திமுகவிற்கு கூட தெரியும், அதிமுகவிற்கு தற்போது தலைமை தாங்குபவர்கள் தங்கள் பலத்தை உணர வேண்டும் என்பதே எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தீவிர விசுவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க:http://“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

பாஜகவின் சமீபத்திய செயல்பாடுகளையும், அதிமுகவின் நிலைப்பாட்டையும் பார்க்கும் பொழுது, “பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா… யாரும் இருக்குமிடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது, அதில் அர்த்தமுள்ளது….” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.


Share this:

Related posts

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M