Newskadai.com
இந்தியா

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

Share this:

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், வெளி நாடுகளில் வசிக்கும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகளாவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முடங்கி இருக்கும் விமான போக்குவரத்தால் வெளி நாடுகளிலிருந்து இந்தியா வந்து நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை அங்குள்ள மாணவர்கள் இழந்துள்ளனர்.

மேலும் படிக்க:http://“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், ”மத்திய கிழக்கு நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத் தயாராகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தற்போது உலகம் முழுவதும் முடக்கபட்டுள்ள அசாதாரணச் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்றும் விடை தெரியாமல் உள்ளது. இச்சூழலில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுத அம்மாணவர்கள் இந்தியா வர முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வுக்கான மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் படிக்க:http://அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு நீதிபதிகள், “நீட் தேர்வை ஏன் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது?” என மருத்துவக் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

கொரோனா நேரத்தில் கோலாகலமாக நடக்கப்போகும் அயோத்தி பூமி பூஜை…!

NEWSKADAI

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN