Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

Share this:

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மாணவர்களின் பார்வை திறன் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்களை பார்க்க நேரிடும் என்பதாலும் ஆன்லைன் வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்வர், ஹேமலதா அமர்வு விசாரித்தது.

விசாரணையில் ஆன்லைன் வகுப்பிற்கு தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கையும் முடித்து வைத்தனர். மேலும் ஆன்லைன் வகுப்பில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து 14 வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தனர். அதன்படி, ஆன்லைன் வகுப்பிற்கான நேரத்தை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும், பெற்றோர் ஆசியர் கலந்துரையாடல் இருக்க வேண்டியது கட்டாயம், மாவட்ட தலைமையகத்தில் கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும், ஆன்லைன் வகுப்பு தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பல தனியார் பள்ளிகள் பீஸ் கட்டாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் அனுமதிப்பது இல்லை, ஆன்லைன் வகுப்பில் அதிக இருக்க மாணவர்களை கட்டாயப்படுத்துவது, வருகைப்பதிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.


Share this:

Related posts

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

NEWSKADAI

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M

வேகமெடுக்கும் கொரோனா… நாகை, கடலூரில் முதல்வர் இன்று ஆய்வு…!!

MANIMARAN M