Newskadai.com
தமிழ்நாடு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

Share this:

உலகளவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கிடையே 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மானவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி முதலே பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ. விற்கான ஆன்லைன் பதிவுகள் நடைபெற உள்ளன. அதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Online

தமிழக உயர் கல்வித்துறையின் கீழ் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 92 ஆயிரம் இளநிலை பட்ட படிப்பிற்காக சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் சமர்ப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in, www.tndceonline.org என்கிற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தேர்வு செய்ய விரும்பும் கல்லூரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியிருக்கும். இதற்காக மாணவர்கள் பலமுறை கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தற்போது கொரோனா காரணமாக மாணவர்கள் அடிக்கடி வெளியில் செல்வதை தடுக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் படி முதல் முறையாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-22351014, 044-2231015 என்ற கட்டுப்பாட்டு அறையை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


Share this:

Related posts

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்…!!

MANIMARAN M

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

NEWSKADAI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI