Newskadai.com
இந்தியா

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பரிதாப பலி..!!!

Share this:

திருப்பதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் பத்மாவதி கோவிட் மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொரோனா சிகிச்சை மையம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அப்போது பணியில் இருந்த 6 மாத கர்ப்பிணி ராதிகா(30) என்ற செவிலியர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளும் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நானி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த செவிலியர் ராதிகாவின் குடும்பத்தினற்கு 10 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“விவசாயிகளுக்கான கறுப்பு சட்டம்”… வேளாண் மசோதா குறித்து மோடியை விளாசிய ராகுல் காந்தி…!!

MANIMARAN M

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமல்ல மெட்ரோ ரயிலும் வரும்… ஒரே ஒரு கர்ப்பிணிக்காக நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்… பொய் வழக்கு போட்ட மாணவிக்கு தக்க தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!

THAVAMANI NATARAJAN

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M