Newskadai.com
தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் – முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்…

Share this:

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருப்பதாவது, மக்கள் எந்த பகுதிகளில் வசித்தாலும், அங்கு உள்ள ரேஷன் கடைகளில் தங்களுக்கான ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அது வெற்றிப் பெற்றதையடுத்து இன்று முதல் படிப்படியாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 5 சதவீதம் கூடுதல் பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.


Share this:

Related posts

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தொடக்கம்… பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

AMARA

இன்று முதல் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…!!

THAVAMANI NATARAJAN

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

THAVAMANI NATARAJAN

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M