Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

Share this:

நாடு முழுவதுமுள்ள இடம்பெயர் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்கள பயன்பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. எந்தவொரு மாநிலத்தை சார்ந்தவரும் வேறு எந்தவொரு மாநிலத்திலும் உள்ள ரேசன் கடைகளில் தங்கள் மாநிலத்தின் வழங்கப்பட்டுள்ள ரேசன் கார்டுகளை கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அனைத்து ரேசன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்யும் நவீன கருவிகள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இந்த கருவி பொறுத்தும் பணி கடந்த ஜூலை மாத இறுதியில் துவங்கபட்டது. அதனடிபடையில் திருச்சி, நெல்லை, நாகை, கரூர், அரியலூர், தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளில் கைரேகை கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் இந்த கருவி பொறுத்தும் பணியை முடிக்க தமிழக உணவு பாதுகாப்பு துறை துரிதப்படுத்தியுள்ளது. இந்த பணி நிறைவடைந்ததும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தபடும் என்று தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

THAVAMANI NATARAJAN

பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்ட ஓட்டுனர்கள்… திருச்சியில் நடந்தேறிய விபரீதம்…

MANIMARAN M

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

MANIMARAN M

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN