Newskadai.com
தமிழ்நாடு

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

Corona virus
Share this:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தற்போது நகரங்களைத் தாண்டி கிராமங்களை பாதித்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கறி விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்ற தகவல் பரவியது.

மேலும் கறி விருந்தில் பங்கேற்றவரின் தந்தை, 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, 20 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கறி விருந்தில் பங்கேற்றவர்கள், அவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் என மொத்தம் 152 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் நுழைய முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறித்து தகவலறிந்து வந்த ஆட்சியர் ராமன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் நேற்று முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: http://ஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்!!…

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, பஜார் தெரு ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் அந்த முகாம்களில் பங்கேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் மக்கள் யாரும் இந்த முகாமில் பங்கேற்வில்லை. அதிகப்பட்சமாக 100 பேர் பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: http://வெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

இதனால் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள சுகாதாரத்துறை, இன்று வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதற்கட்டமாக தொற்று தீவிரமாக பரவிய பகுதிகளில் வசிப்போரின் வீடுகளில் சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு அழிப்பது மிகவும் முக்கியமானது.


Share this:

Related posts

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN

காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…!!

THAVAMANI NATARAJAN

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA