Newskadai.com
தமிழ்நாடு

‘சைக்கோ’ சகோதரனால் வந்த வினை… உயிருடன் ப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட முதியவர் பரிதாப மரணம்…!

Attempted murder
Share this:

உடல் நலம் பாதிக்கப்பட்டவரை உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சேலம் கந்தம்பட்டி பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் சரவணன் வயது 70, இவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் வயது 74, இவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்ணன் இறந்து விட்டதாக கூறி குளிர்சாதனப்பெட்டி வேண்டும் என தகவல் கொடுத்துள்ளார். இதனால் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்கள் சரவணன் வீட்டிற்கு பெட்டியை கொடுத்து விட்டு பிற்பகல் வருவதாக கூறிச் சென்றுள்ளனர்.

Oldman kept in refrigerator dead

அதன்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயிரோடு இருப்பவரை ஏன் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை, அதனால் தான் அவரது உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என பதிலளித்துள்ளார்.

Oldman kept in refrigerator dead

இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று அதிகாலை முதியவர் பாலசுப்பிரமணியகுமார் உயிரிழந்தார். இது தொடர்பாக முதியவரின் தம்பி சரவணன் மீது அஜாக்கிரதையாக நடத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

MANIMARAN M

“நான் இன்னும் சாகலப்பா”… நொந்து போன விஜிபி தாஸ் வெளியிட்ட வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

நாகை மாவட்டத்திலேயே முதலிடம்… ஐ.ஏ.எஸ்.கனவுடன் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணின் மகள்…!!

NEWSKADAI

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M