Newskadai.com
தமிழ்நாடு

வயதானவர்களை தேடி வலைவிரிக்கும் கொரோனா… எச்சரிக்கை ரிப்போர்ட்..!!

old age people most affected by corona
Share this:

தமிழகத்தில் கொரோனாவால் முதியவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என தகவல் வெளியானது. நேற்று 4,666 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 30 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களை விட அதிக அளவு சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இதுவரை 82,46,830 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 6,65,930 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 4,02,216 ஆண்களும், 2,63,682 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 24,930 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 85,031 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Corona affects a large number of the elderlyமேலும் படிக்க: http://200 நாட்களுக்கு பிறகு நாளை 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு..!!!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 38 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். சென்னையை பொருத்தவரை 13 பேர், கோவையில் 5 பேர், திருப்பூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் தலா 4 பேர் , கடலூர், கிருஷ்ணகிரி, சேலத்தில் தலா 3 பேர், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூரில் தலா 2 பேர், தூத்துக்குடி, நீலகிரி, திண்டுக்கல், விழுப்புரம்,தேனி, மதுரையில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க: http://தொடர்ந்து குறையும் தங்கம் விலை… இது வாங்க வேண்டிய நேரம்..!!

இதுவரையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 10,371 பேர் ஆகும். பாதிப்பில் இருந்து நேற்று 5,117 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

ஒரே நாடு ஒரே ரேஷன் – முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்…

MANIMARAN M

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

THAVAMANI NATARAJAN