Newskadai.com
இந்தியா

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக உலக அளவில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் ஆலயத்தில் ரத யாத்திரை கூட பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

இந்நிலையில் பூரி ஜெகநாதர் ஆலயத்தை திறக்க வலியுறுத்தி ஒடிசாவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள மாநில அரசு, பூரி ஜெகநாதர் ஆலயத்தின் கருவறையில் போதுமான இடவசதி இல்லை என்றும், பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவிலை திறந்துவிட்டால் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் கோவிலில் பணியாற்றிய 351 ஊழியர்கள், 51 பணியாளர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஓடிசா மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Share this:

Related posts

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் பிரதமர் – தலைவர்கள் வாழ்த்து

MANIMARAN M

ஒயர் தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

THAVAMANI NATARAJAN

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்…!!

MANIMARAN M