Newskadai.com
இந்தியா

அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறப்பு… வெளியானது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Theatre Reopen
Share this:

இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பித்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமாவை நம்பி வாழ்க்கையை ஓட்டி வந்த லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென பெப்சி சார்பில் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.

தற்போது மீண்டும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 100 நபர்களுடன் ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்திருந்தது. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, தியேட்டர்கள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட, திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை என்றும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு 5ம் கட்ட பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 180 நாட்களுக்கும் மேலாக பூட்டியிருந்த தியேட்டர்களை திறக்க உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை பாதுகாக்க தேசிய கவுன்சில் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

விவசாயத்திற்கு எதிரான வேளாண் திட்ட மசோதாக்களை நாடு ஒருபோதும் அனுமதிக்காது – ராகுல் காந்தி

MANIMARAN M

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M