Newskadai.com
தமிழ்நாடு

அக்.31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… தடைகளும் தளர்வுகளும்…!!!

Share this:

கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில், மாதம் மாதம் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்றுடன் நிறைவடையும் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் தடைகளையும் தளர்வுகளையும் அறிவித்துள்ளது மாநில அரசு. அதில் குறிப்பிட்டுள்ள,

புதிய தளர்வுகள் : –

  • உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி.
  • திரைப்படப் படப்பிடிப்புகளில் வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு 100 நபர்கள் வரை கலந்துகொள்ள அனுமதி.
  • தினந்தோறும் வெளிமாநிலங்களிலிருந்து 100 விமானங்கள் வந்து செல்ல அனுமதி.
  • அரசு, அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதி.
  • ஊரக மற்றும் நகர்புற வார சந்தைகள் செயல்பட அனுமதி.

தொடரும் தடைகள் :-

  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை.
  • மதம், அரசியல், பொழுது போக்கு கூட்டங்களுக்கு தடை.
  • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பூங்காங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை.
  • உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுக்குத் தடை.
  • மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித் தடங்களைத் தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை.
  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை.

மேலும் மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும் என்றும், தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்ற ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

மறியலில் சிக்கிய அமைச்சர் கார்… ஆவேசமடைந்த மக்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு…!

AMARA

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M

சேலம் ஆவின் பால் பண்ணையால் சுற்றி இருப்பவர்களுக்கு வந்த சிக்கல்… போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN