Newskadai.com
உலகம்

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

Share this:

இந்தியாவுக்கு வந்துட்டு போனதுல இருந்து, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிரக சூழ்நிலை சரி இல்ல போல. கொரோனவ அசால்டா பந்தாடலாமுன்னு நெனச்ச டிரம்ப்ப இப்ப கொரோனோ (covid-19) பந்தாடிகிட்டு இருக்கு. கொரோனா சம்பந்தமா அவர் எது பேசினாலும் செஞ்சாலும் அது அவருக்கே ஆப்பா மாறுது. பத்தாததுக்கு இரண்டு போலீஸ்காரங்க செஞ்ச மோசமான காரியத்தால, கருப்பின மக்கள் ஒன்று திரண்டு பெரும் போராட்டங்களை நடத்திட்டு வராங்க. அமெரிக்க மட்டுமில்லாம உலகம் முழுக்க “பிளாக் லிவ்ஸ் மேட்டர்” பத்திக்கிட்டு எரியுது.

இந்த விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்ப்போட ஓட்டு வங்கியை சரிய வச்சிருச்சுன்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது. ஒரு சாமானியன் ஆன “ஜார்ஜ் ஃபிளயெட்” க்கு நேர்ந்த கொடூர மரணமும் கொரோனாவும் டிரம்பின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கு.

மேலும் படிக்க:http://ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

தனது அதிகாரத்தை தக்க வச்சுக்க அடுத்த மாதம் நடக்க இருக்கிற அதிபர் தேர்தலையே தள்ளிவைக்க டிரம்ப் பிளான் போடுறார். பொரியில மாட்ன எலி மாதிரி தத்தளிச்சுட்டு இருக்கிற அமெரிக்க அதிபர் டிரம்ப்ப கடுப்பேத்துற மாதிரி நேத்து பேசியிருக்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா. ஜான் லூயிஸ் என்கிற கருப்பின தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்திய முன்னாள் அதிபர் ஒபாமா தனது உரையின் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் நடவடிக்கைகளை காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

மேலும் படிக்க:http://ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

ஒபாமா கூறியதாவது, “அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தேர்தலை தள்ளி வைக்க நினைக்கிறார்கள். தபால் ஓட்டுக்களை பற்றி தவறாக பேசுகிறார்கள். சிறுபான்மை மக்களையும், போராடும் இளைஞர்களையும் குறிவைத்துத் தாக்குகிறார்கள். தடைசெய்யப்பட்ட சட்டங்களுக்கு புத்துயிர் கொடுக்கிறார்கள். இனவாதத்தை தூண்டுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களின் எழுச்சியை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. நம்மைவிட்டு பிரிந்த ஜான் லூயிஸ் அமெரிக்காவின் பொக்கிஷம். அவருடன் நடந்து அவருடைய வழிகாட்டுதலை பெற்ற நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். இந்த ஆத்மாவையும் அமெரிக்காவையும் நம்மையும் கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று கூறி தனது புகழஞ்சலியை நிறைவு செய்தார்.


Share this:

Related posts

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI