Newskadai.com
அரசியல்

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

OPS
Share this:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குவதற்கு முன்பே அதிமுகவில் உட்கட்சி பூசல் ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறது. அதிமுகவின் நிரந்தர முதலமைச்சர் என அழைக்கப்பட்ட ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் சில காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்ய சசிகலா ஆதரவுடன் அரியாணை ஏறினார் எடப்பாடி பழனிசாமி. அதன் இரு தரப்பிற்கும் தர்ம யுத்தம் நடந்தது, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார், இபிஎஸ் – ஓபிஎஸ் ஒன்றிணைந்து தர்ம யுத்தத்தை முடித்து வைத்தனர்.

 

CM

 

அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டனர். அதே போல் ஆட்சியிலும் ஓ.பி.எஸுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளதால் அமைச்சர் செல்லூர் ராஜூ-விடம் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி அதனை முடிவு செய்வோம் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரம் என கொளுத்தி போட்டார். அதுகுறித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார், மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் விதவிதமாக கருத்து கூறி வருகின்றனர்.

 

CM


அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேனியில் ஓபிஎஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். சொந்த தொகுதியான தேனி முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான், தமிழக நிரந்தர முதல்வர் என்று போஸ்டர்கள் ஒ ட்டியுள்ளனர். பெரியகுளத்தில் உள்ள தென்கரை ஓ.பி.எஸ் இல்லம் அருகிலும் இதே போல் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதனால் அதிமுகவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.


Share this:

Related posts

திமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா?

AMARA

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு… கொரோனா நிதியாக ரூ.50 லட்சம் அளிப்பு…!

NEWSKADAI

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

NEWSKADAI

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

NEWSKADAI