Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

Share this:

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் தற்போது பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, திமுகவினர் சொல்லும் நபர்களை தான் பணியில் அமர்த்த வேண்டும் என்று அதிகாரிகள் மிரட்டப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிக்கை மூலம் தெரிவித்ததுடன், நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார். மேலும் அந்த அறிக்கையில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொய்வின்றி தங்கு தடையின்றி நடக்க இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டிருந்தேன்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் “தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்” என்ற உத்திரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதற்காக, முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.


Share this:

Related posts

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் பலி…! உறவினர்கள் கதறல்

MANIMARAN M

வீடு திரும்பினார் விஜயகாந்த்… மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

NEWSKADAI

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN