Newskadai.com
தமிழ்நாடு

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

Nurse
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Nurse

இதுபற்றி செவிலியர்களிடம் கேட்டபோது சேலம் அரசு மருத்துவமணையில் 600 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டில் 80 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில் கூடுதல் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டிற்கு கூட செல்லாமல் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் எங்களுக்கு தரமான உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர். இப்போரட்டத்தை அடுத்து மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார், அதன் பின்பு செவிலியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


Share this:

Related posts

தடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…!!

THAVAMANI NATARAJAN

ரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…

MANIMARAN M

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

நள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்… பதறியடித்து போய் பார்த்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

MANIMARAN M