Newskadai.com
இந்தியா

2024 -ல் தான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அதிர்ச்சி தகவல்..!!!

Share this:

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனிகா இணைந்து தயாரித்து பரிசோதனை செய்து வரும் கொரோனா தடுப்பு ஊசி மீது உலகமே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது. இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா நாட்டு மக்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை பரிசோதனை செய்து வந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு பரிசோதனையை நிறுத்தும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இங்கும் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா தடுப்பு மருந்து அடுத்தாண்டு தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும் என்றும், கொரோனா தடுப்பு மருத்து உலகில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை இந்திய மக்களுக்கு கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா, 2024ம் ஆண்டு வரை உலக மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு இன்னும் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த செய்தி மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது.


Share this:

Related posts

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

MANIMARAN M

அம்பலமானது பலே விவகாரம்… சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய காவல் அதிகாரி…!!

THAVAMANI NATARAJAN

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M