Newskadai.com
உலகம்

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

Share this:

தென் கொரியாவிலிருந்து வந்த வட கொரிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வட கொரியாவில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவிற்கு சென்றவர், கடந்த வாரம் திரும்பி வந்தவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் ஏற்பட்டிருக்கும் முதல் தொற்று என்று வட கொரிய அரசு ஊடகம் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் தென் கொரிய எல்லை நகரான கேசாங்கில் பொது ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனே செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே தங்கள் நாட்டு எல்லையை மூடிய தென் கொரியா அரசு ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இரு நாட்டு எல்லையை சமீபத்தில் யாரும் சட்டவிரோதமாகக் கடக்கவில்லை என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புகள் நிறைந்த எல்லையை அந்த நபர் எப்படி கடந்து வந்தார் என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜோங், இதற்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


Share this:

Related posts

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M