Newskadai.com
அரசியல்

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

Seeman
Share this:

தமிழகத்தில் இந்தி மொழி சம்பந்தமான விவகாரங்கள் புயலைக் கிளப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இயற்கை மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்தும் அதிகப்படியாக 37 மருத்துவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர். ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்த ஆன்லைன் வகுப்பில் இந்தியில் உரையாற்றினார். இந்தி தெரியாத, மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி அவரிடம் கூறினர்.

ஆயுஷ் செயலர் “தனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் ஹிந்தி மொழி புரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள்.” என்று கூறிய விஷயம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. கனிமொழி, ஸ்டாலின், சீமான், ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசை எதிர்த்தும், ஆயுஷ் செயலாளருக்கு எதிராகவும் கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் “இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்று சொல்வது போல இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா? பல மொழிகள் என்றால் ஒரே நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!

NEWSKADAI

வீடு திரும்பினார் விஜயகாந்த்… மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

NEWSKADAI

திமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா?

AMARA

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

“திமுக நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்”… மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம்…!!

NEWSKADAI

ஊரடங்கு நீட்டிப்பு… உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

NEWSKADAI