Newskadai.com
அரசியல்

“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…!!

Share this:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா விரைவில் விடுதலையடைந்து வெளியில் வருவார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சசிகலா விடுதலையான பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்தும் அதிமுகவின் நிலைபாடு குறித்தும் அரசியல் விமர்சகள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பலவித விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சசிகலாவுக்கு அதிகமுவில் இடமில்லை என்று கூறி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஏழை எளிய மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினார்.

Sasikala
Sasikala

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடந்த 6 மாத கால கொரோனா பொது ஊரடங்கினால் தமிழக அரசுக்கு 40 சதவிகிதம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. அதில் தற்போது 10 சதவிகிதம் கூடுதல் வருவாய் வர தொடங்கியுள்ளது என்று கூறினார். பின்னர் சசிகலா குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு, சசிகலாவை எதிர்த்துதான் தமிழகத்தில் ஆட்சியும், அதிமுக கட்சியும் நடைபெற்று வருகிறது. அதனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்பில்லை என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

எம்.பி.கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்…. 3ல் இருந்து 5 ஆக உயர்வு…!!

AMARA

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

“இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை”… பேரவையில் உறுதி அளித்த முதல்வர்…!!

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

ஒரே ஒரு போன்கால்…. அலறியடித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்…!

AMARA