Newskadai.com
இந்தியா

பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி…

Share this:

கொரோனா (covid-19) பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 23ஆம் தேதியோடு முடித்து வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் முதல் தேதி வரை நடைபெற உள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக நாடாளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது மற்றும் தனிநபர் மசோதாக்களுக்கு அனுமதியில்லை என்று அதிரடி அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, கொரோனா சமூக பரவல், சீன ஊடுருவல், வேலையில்லா திண்டாட்டம், புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020 உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்புவதற்கு தயாராக இருந்த எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு இடியாய் இறங்கியுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றன.


Share this:

Related posts

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI

சிக்கலில் வாட்சப் – தகவல்கள் சேகரிக்கப்படுமா..? அச்சத்தில் பயனாளர்கள்..!

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M