Newskadai.com
அரசியல்

#BREAKING எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Share this:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தனது சொந்த ஊரான தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவல் தீயாய் பரவி வந்தது. திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்த செளந்தர்யா என்ற கல்லூரி மாணவியை தனது பெற்றோர், சொந்தங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.ஆனால் தனது மகளுக்கும் எம்.எல்.ஏ.வுக்கு வயது வித்தியாசம் அதிகம் என்றும், அவர் தன்னுடைய மகளை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுவிட்டதாகவும் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் குற்றச்சாட்டினார்.

இதை மறுத்த எம்.எல்.ஏ. பிரபு இருவரும் காதலித்து வந்ததாகவும், முறையாக பெண் கேட்டும் தர மறுத்ததால் தான் தனது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மணப்பெண் செளந்தர்யாவையும், பெண்ணின் தந்தையான சுவாமி நாதனையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு எம்.எல்.ஏ. பிரபு காதல் திருமணம் செய்த செளந்தர்யாவும், அவருடைய தந்தையான சுவாமிநாதனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான சவுந்தர்யா தனது முழு விருப்பத்துடனே திருமணம் நடைபெற்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கணவர் குடும்பத்துடன் செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்துள்ளார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சவுந்தர்யா தனது கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்து, சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர்.


Share this:

Related posts

எம்.பி.கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

“இது மட்டுமே உங்களுடைய இலக்கு”… தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பிறப்பித்த கட்டளை…!!

MANIMARAN M

முதல்வர் வேட்பாளர் யார்..? 6 ஆம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் தலைமைக்கழகம் வர உத்தரவு…

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்… தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி…!

NEWSKADAI