Newskadai.com
அரசியல்

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

Share this:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

   

அதன் பின்னர் முதலமைச்சர் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர் என்றும், 1968 ஆம் ஆண்டு சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து இந்தி நீக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்று இருப்பினும், தமிழக அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தொடர்ந்து இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களை மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், “#இருமொழி_கொள்கையே தமிழகம்ஏற்கும்: தமிழக அரசின் இந்தமுடிவை விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. களங்கத்தைத் தவிர்க்கும் #கனமான_முடிவு” என ட்வீட் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், “புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: http://அரசியல் “தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவின் நிறுவனர் ராமதாஸும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். தனது ட்விட்டரில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: http://இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அந்த இருபெரும் தலைவர்களின் வழி நின்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை… மோடி கொடுத்த ஒற்றை அட்வைஸ்…!

AMARA

“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

NEWSKADAI

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN