முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதிய கல்விக் கொள்கை குறித்தது தனது ட்விட்டர் பக்கத்தில் “தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை” என்று பதிவிட்டு தமிழ்மொழியில் மாற்றியமைக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கல்விக் கொள்கைக் குறித்தான காணொளியின் இணைப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்றுவரை இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழகத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மறைமுக மொழி திணிப்பைச் செய்யும் என்று பலரும் இப்புதியக் கல்விக் கொள்கை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்”, என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். இப்பதிவின் மூலம் ஒரு போதும் மாநிலங்களில் எந்த ஒரு மொழித் திணிப்பும் இல்லை என்று உறுதி அளித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை #NewEducationPolicy அறிமுகப்படுத்தியமைக்கு
பிரதமர் @narendramodi அவர்களுக்கும், தங்களுக்கும் @DrRPNishank
எனது மனமார்ந்த நன்றி !
மொழி திணிப்பு எந்த மாநிலத்திலும் இருக்காது என்று தாங்கள் தெளிவுபடுத்தியதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் ! pic.twitter.com/dIHsAO1Vqm— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 2, 2020