Newskadai.com
இந்தியா

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

Pranab Mukherjee
Share this:

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி இரவு தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்தார். இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் பின்னர், பிரணாப் முகர்ஜிக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் அவருக்கு கொரோனா தொற்றுக்கான தீவிர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதும், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் உறுப்புகள் செயல்படுவதாகவும், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. பல்துறை மருத்துவ வல்லுநர்கள் குழு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகன் மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் உடல்நிலை குறித்து கூறுகையில், இன்று காலை முதல் தனது தந்தையின் உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், தன்னை தந்தை சீரான உடல் நலத்துடன் இருப்பதால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Share this:

Related posts

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

திருநங்கைகளை பாதுகாக்க தேசிய கவுன்சில் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

MANIMARAN M

அபராதம் மூலம் அபார வருவாய் ஈட்டிய ரயில்வே… டிக்கெட் இல்லாத பயணிகளிடம் ரூ.561 கோடி வசூல்…!!

MANIMARAN M

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M