Newskadai.com
அரசியல்

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

Epass
Share this:

கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து கடந்த முறை மத்திய அரசு வெளியிட்ட 3ம் கட்ட தளர்வுகளில் இ – பாஸ் நடைமுறை தேவையில்லை என அறிவித்திருந்தது.

 

Epass

 

ஆனால் 7ம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிற மாவட்டம் அல்லது மாநிலங்களுக்குச் செல்லும் போது ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக அவசர தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

 

Epass
 

 

மேலும் தமிழகத்தில் இ-பாஸ் முறைகேடுகள் நடப்பதாகவும், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட இ-பாஸ் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அறிவித்தார்.

 

Epass

 

இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான தடைகளால் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல எவ்வித தடைகளும் கூடாது என மத்திய அரசின் தளர்வுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க இ-பாஸ் உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

Epass

 

மத்திய அரசின் இந்த அறிவிப்பை ஏற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இ-பாஸ் முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பு புதுச்சேரி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

MANIMARAN M

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

போடி போஸ்டர் விவகாரம்… சத்தமில்லாமல் ஓ.பி.எஸ். போட்ட அதிரடி உத்தரவு…!!

AMARA