Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஒரே நாளில் சரசரவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு கிராம் கூட இவ்வளவு விலையா?

Share this:

கொரோனா நெருக்கடியால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நாடுகள் பலவும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பல ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. கிட்டதட்ட 43 ஆயிரத்தை தொடும் அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி காலையை விட மாலை தங்கத்தின் விலை சற்றே குறைந்து காணப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 755க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.520 குறைந்து 38 ஆயிரத்து 040க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைந்ததால் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலையிலேயே தங்கத்தின் விலை சரசரவென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 41 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 805 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 328 அதிகரித்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் கிராமிற்கு நேற்றைய விலையிருந்து ரூ.2.70 காசுகள் உயர்ந்து 63.10 காசாக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 63 ஆயிரத்து 100 ரூபாய் ஆகும்.


Share this:

Related posts

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

THAVAMANI NATARAJAN

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN