Newskadai.com
தேர்டு ஐ லைஃப் ஸ்டைல்

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

Short Story Katchi
Share this:

மதியம் 2:30 மணி காளி கட்சி ஆபிசில் படுத்து உறங்கிகொண்டிருந்தான் அப்பொழுது வானம் வெள்ளை நிறத்தை மறைக்க இருள்சூல்ந்து கொண்டதுபோலவும் மீண்டும் வெள்ளை நிறமாக மாறுவதற்கு அந்த தயாரவதாக   கனவாக கண்டான். திடுக்கிட்டு எழுந்து உக்கார்ந்துகொண்டு யோசித்தான். ஏதோ அவனுடைய மனசு கலக்கத்தில் ஆழ்த்தியது. இருந்தும் கலங்காமல் தன் தலைவனுக்காக எதையும் செய்யக்கூடியவன்.

ஒரு முறை தன்னுடைய தலைவன் பஞ்சாயத்து எலக்சன்ல தலைவரா வருன்னுன்றதுக்காக முருகர் சாமிகிட்ட கும்பிட்டுகின்னான் எங்க தலைவா் ஜெய்சிட்டா நான் உனக்கு அலகு குத்தி தோ் இழுக்குறன்னு  வேண்டிகின்னான்  இத்தன வருசமா இந்த நாளுக்குதானே காத்திருந்தோன்னு நினைச்சி போஸ்டா் ஒட்றது, வீடு வீடுக்கு பொம்பளைங்களுக்கு ஜாக்கெட் பிட், குடுக்கிறது ஆம்பளைங்களுக்கு சாரயம் எடுத்துன்னு வந்து ஊத்தறது ராத்திரி ஆனா வீடு வீடா வெத்தலை வச்சி சத்தியம் வாங்கிறதுன்னு இறங்கிட்டான் காளியப்பன்.

காளியப்பன் வீடு முழுவதும் பாத்தா உங்கள் ஓட்டு அன்புக்கேன்னு எழுதியிருக்கும், உங்கள் ஓட்டு பூட்டு சாவிக்கேன்னு எழுதியிருக்கும் தன் தலைவன பத்தியா யாரவது குற சொன்ன உடனே சண்டைக்கு போய்டுவான் ஒரு தடவ தன்பொண்டாட்டியை போட்டு அடிச்சிட்டான் ஏன்ன “எப்பாபாரு அந்த அன்பு தலைவனே கதினுகிடக்கிறே என் மேல அன்பு கொஞ்சங்கூட இல்லையேன்னு கேட்டதுக்கு” அவன் பொண்டாட்டியே வெளுத்து வாங்கனான் என் அன்பு தலைவன யாரவது தப்பா பேசினா வெட்டுவேன்னு சொல்லுவான்.

அன்பு ஊர்தலைவரா வந்த பிறகு, ஜெய்கனுன்றதுக்காக தோ் இழுத்த காளியப்பனுக்கு  குருப் அவுஸ் வீடு ஒன்னு போட்டுகொடுத்தான்.  காளியப்பனால பொறுக்க முடியல தன் தலைவன் எனக்கு குருப் அவுஸ் வீடு கொடுத்தான்னுட்டு தல கால் புரியமா திரிஞ்சான்.

short story Voters

காளியப்பனுக்கு கல்யாணம் ஆகி இந்த அஞ்சு வருசத்தில இப்பதான் கௌரம்மா முழுகாம இருக்கா, இத்தனை வருசமா தன் தலைவனே கதின்னிட்டு இருந்தான் காளியப்பன். அன்பு தலைவன் இப்ப அந்த கட்சியில  இருந்து விலகிட்டு வேற கட்சிக்கு போனதால எம்.எல்.ஏ சீட்டு ஒதுக்கிட்டாங்க ஆனா அன்பு எம்.எல்.ஏ ஆக கூடாதின்னிட்டு சிலா் விடாம தடுத்துட்டு இருந்தாங்க.

அன்புக்குதான் வெற்றின்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க மத்த கட்சிகாரங்க ஓட்டு எண்ண விடல கலாட்டா பண்ணாங்க ஓட்டு எண்ணிக்கை செய்ய இன்னைக்குதான் கடைசி தேதின்றதால காளியப்பனுக்கு இந்த செய்தி தெரியவர அந்த ஆபிசுக்கே போய் அவமேலயே மண்னென்னையை ஊத்தி கொழுத்திக்கினான் அன்னைக்குத்தான் கௌரம்மா வயித்து வலியால துடியா துடிச்சா நாகம்மாவும் முனியனும் சேந்து தனியார் ஆன்புலன்ச வரசொன்னாங்க

அந்த வழியா வந்த ஆம்புலன்ச கட்சிகாரங்க மடக்கி டைவர கிழ இறக்கி தள்ளிட்டு அந்த கட்சிகாரங்களே, தீ காயத்துடன் இருந்த காளியப்பன ஏத்தி அனுப்பிட்டாங்க  தன் தலைவனுக்காக மண்னென்னை ஊத்தி எறிஞ்ச காளியப்பன காப்பத்திட்டாங்க அந்த டைவா் நடந்த போன் பண்ணி நீங்க வேற ஆம்புலன்சு கூப்புடுங்கன்னு போன கட்பண்ணிட்டான். காளியப்பன் பொண்டாட்டி புள்ளையை காப்பத்த முடியல  சரியான நேரத்துக்கு அந்த ஆம்புலன்ஸ் போய் சேரல அதனால இரட்ட உசுரு போய்டுச்சி

இந்த காளியப்பனுக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ளைங்க காளியாவே கெடக்கவேண்டியதுதானே புன்டி புளி ஊறுக்காபையன்னு  கட்சியிலிருந்து என்னத சம்பாதிச்சான் கட்சி துண்டு, கட்சி வேட்டி, ஊடு புறாம் நோட்டிஸ்ங்க சட்டையில குத்திகிற பேட்சிங்க, குருப் அவுஸ் வுடு இதுக்கு ரண்டு உசிர பறிகொடுத்துட்டான்னு   மாமியார் நாகம்மா திட்டி தீா்த்தால் ஆனாது ஆய்போச்சி என்னத்த செய்ய வாய்யும் வயிறுமா இருந்த பொண்ண இப்படி கொன்னுட்டான். அவ வாங்கின்னு வந்த வரம் அவ்வளவுதான்னு முனியன் சப்பு கொட்டினான்.

ஊா் மக்கள்ல அந்த அன்புதலைவன் மேல  இருந்த அன்ப அவன் பொண்டாட்டி மேல வச்சிருந்தா இதல்லாம் நடக்குமான்னு பேசியினு இருந்தாங்க தா்மாஸ்பத்திரியிலேயே பொணங்க கிடக்குதுன்னு  பேசிகின்னாங்க சாய்ந்திரல்லாம் எடுத்துன்னு ஊருக்கு வந்துடுவாங்கன்னு எதிர்பாத்தாங்க ஆனா வரல நெட் 9மணி ஆயிடுச்சி  அதனாள பொணத்த எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க காளியப்பனால பொண்டாட்டி புள்ளையை பாக்க வரமுடியல ஆஸ்பத்திரியல யாரும் இல்லாத அனாத மாதிரி தீக்காயத்தோட படுத்து கிடக்குறான்.

வானத்தில் நடந்த அந்த காட்சி அவன் கண் முன்னால் இருப்பது போல தெரிகின்றது. அன்பு எம்.எல்.ஏ கழுத்துல பாராட்டு மாலை விழுது எப்பவும் அன்புதலைவன் சொல்ற டைலாக்கு இதுதான் நம்ம கழுத்துல மாலை விழுனும்ன்னா கொஞ்சபோ் மண்ணுக்கு போரது தப்பு இல்லன்னு சொல்லுவான். அன்பு தலைவன்மேல் அன்பா இருந்த காளியப்பனுடைய குடும்பம் காளியானதுதான் மிச்சம்.

-முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI