Newskadai.com
தேர்டு ஐ லைஃப் ஸ்டைல்

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

Kankaanikkapadum pattu
Share this:

தொந்தரவுகள் பல இருந்தும் வாழ்க்கை வாழத்தானே வேணும், என்ற முடிவுடன் சென்றுகொண்டிருந்தார் முனியன். முனியனுக்கோ வாழ்க்கையில் எந்த இழக்ககும் இல்லை இருந்தும் பெண் பிள்ளைகளை பெத்த மவராசனா வாழ்ந்தார். தன்னுடைய சம்பாதியத்தில் இருந்து கொஞ்சமும் எடுத்து வைக்கமுடியல தனக்கு பிள்ளைகள்தான் சொத்து என்று நினைத்தார்.

உடலும், மனமும் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் குடும்ப வாழ்வை விட்டு மேல் உலகை அடைந்தார். குடும்பத்தை சுமக்கின்ற பொறுப்பு பட்டுவுக்கு வந்துவிட்டது தனக்கு பின்னால் உள்ள தங்கைகளில் வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டும் என்ற முடிவுடன் திருமணம் செய்யப்போவதில்லை என்ற இருந்தாள்.

பட்டு  பழைய நினைவுகளில் மூழ்கினாள், அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக வருகிறது. ஏம்மா இந்த வேலையைக் கூட சரியா செய்யத் தெரியல நீயெல்லாம் எதுக்குமா வேலைக்கு வந்துட்ட என்று சூப்பவைசா் திட்டினார்.  கல்யாணம் ஆகாத வயசு பார்ப்பதற்கு எளிமை நிறைந்திருக்கும் முகம் ஒல்லியான தேகம்,  கோல் போன்ற முகம். பட்டு முதல்ல பிறந்தவ என்பதால பத்தாவது வரைக்கும் படித்து படிப்பை தொடராமல் தன்னுடை தந்தையின் இறப்பிற்கு பிறகு தங்கைகளை பார்த்துகொள்ளவேண்டும் என்பதற்காக  தன்னை கரைத்துக்கொண்டவள்.

CCTV Camera

அந்த வங்கியில அவள் அப்பா முனியன் டெம்பா்வரியாக வாட்மேன் வேலை செய்திருக்கார்  வங்கி மேனேஜர்  நம்ம பேங்கள பாத்ரூம் கழுவரது கூட்டி பெருக்கிற வேலை இருக்கு ஒரு ஆள் ஏற்பாடு செய்யனும்பான்னு முனியகிட்ட  சொன்னாரு.  அவரு யாரைத் தேடறதின்னு தன் பெரிய மகளையே அந்த வேலைக்கு அமா்த்திட்டாரு பட்டுவுக்கு  பாத்ரூம் கிளின்பண்றவேலை  பட்டுக்கு  காலால் இட்ட வேலைகளையெல்லாம் தலையால் செய்வாள்.

வங்கியை கூட்டுவது பெருக்குவது பாத்ரூம் சுத்தமாக பெனாயில் போட்டு கழுவுறதுன்னு எல்லாவேளைகளையும் செய்துவந்தாள். அத்தோடு அவள் இளமையின் மீது அனைவருக்கும் ஒரு கண் இருந்தது, இருந்தாலும்  பாத்ரூம் கழுவுற பெண்தானே என்று எல்லோரும் இளக்காரமாக நினைச்சாங்க. ஸ்டாப்புங்க மதிய  சாப்பாடு முடிந்த பிறகு அந்த டிபன் கேரியா்களை கழுவதற்கு முன்னால அதில மிச்சம் மீதி இருந்த உணவு பொரியல் எல்லாத்தையும் ஒன்று சோ்த்து தெருவுல இருக்கிற பிச்சைகாரா்களுக்கு கொடுத்துவிடுவாள்.

இப்படி அவளுடைய வேலை அனுமார் வாலு போல நீண்டுக்கொண்டே இருந்துச்சி ஒரு நாள் இந்த ஆப்பிசுக்கு எட்டாவது படித்தவா்களை வங்கிக்கு பியுனாக தோ்வு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அந்த வங்கில இருந்த பட்டுவின் குடும்பத்தை நினைத்து வங்கி மேனேஜா் பட்டுவ வேலைக்கு சேத்துகினாரு. பட்டுக்கு அது பழக்கமான இடமானதால எந்த தயக்கும் இல்லாமல் வேலை செய்தாள் ஆனா கொஞ்சம் நஞ்சம் டார்ச்சா் இல்ல எப்ப பாரு பட்டு பட்டுன்னு  எதுக்கெடுத்தாலும் அந்த பொண்ணை கூப்ட்னே இருப்பாங்க

வெளியில இருந்து வருகின்ற கஸ்டமா்களும் பட்டு அந்த டெபாசிட் பாம் கொடுக்கா, அந்த பணம் எடுக்கிறத கொடுக்கா, டி.டி. பாம் கொடுங்கன்னு கைகள் நீண்ட வண்ணம் இருந்து கொண்டே இருக்கும் பத்தாதக்கு யாராவது எழுத படிக்க தெரியாத வயதான மூதாட்டிகள் வந்து  எல்ப் கேட்டா பட்டு இது என்னான்னு பாரும்மான்னு சொல்லிடுவாங்க அதையும் பட்டுதான் பாக்கனும்.

இப்படி  அலுவலக வேலையும் வீட்டு வேலையும்  செய்ய தவறமாட்டாள். வங்கி மேனேஜா்  பணம் எண்ணுகிற வேலைகளையெல்லாம் கொடுத்திடுவாரு அந்த வங்கியில் கட்டுக்கட்டாக பணம் குவிந்துக்கிடக்கும் அதையெல்லாம் எண்ணுவதும் அடுக்குவதும் அவளுடைய வேலைகள் கிழிந்த நோட்டுகள் கண்டு பிடிச்சி எடுக்கனும், கள்ள நோட்டு இருக்கான்னு கண்டுபிடிக்கனும், அவளுக்கு அந்த நோட்டுகளை எண்ணி அடுக்குவது தெரியலன்றதால வங்கி அலுவலா்  பட்டுவை அழைத்து  பணம் என்றது எப்படின்னு  ஒரு முறை டெமோ காட்டினாரு

அப்பொழுதெல்லாம் அவள் ஒரு பணக்காரியாக தன்னை உருவகப்படுத்திக்கொள்வாள் கவுண்த்டா்களுக்கு இவள்தான் பணம் பட்டுவாடா செய்வாள். ஒருமுறை தன்னுடைய தங்கைகளின் திருமணத்திற்காக பணம் எடுத்துவிடலாம் என்று நினைப்பாள் ஆனால் அது பாவம் துரோகம் என்று நினைத்து தன்னுடைய கஸ்டத்தை மேலும் மேலும் சோ்த்துகொண்டே போவாள்.

 வங்கியில்  பணம் ஒரு லட்சம் காணமல் போய்விட்டது.   பட்டுதான் அந்த பணத்தை எடுத்திருப்பாள் என்று அவளை இழுத்துக்கொண்டு  போலிஸ்டேசனுக்கு போய்ட்டா் மேனேஜா் போலிஸ் வந்து ஆய்வு செய்ததில் பட்டு பணத்தை எடுக்கவில்லை என்று முடிவானது. ஆனால் எதுவுமே தெரியாமல் பட்டுத்தான் பணத்தை எடுத்தாள் என்பது அவளின் நிலைமையைக் காட்டிதான் என்பதை புரிந்துகொண்டாள். சி.சி.டி.வி கேமிராவை செக் பண்ணா பணத்தை பட்டு எடுக்கவில்லை என்று உறுதியானது,

வாழ்க்கை எவ்வளவுதான் துன்பங்களை கொடுத்தாலும் கற்றுக்கொண்ட மன புத்தியிலிருந்து விலகாது நடக்க சாதாரண சாமானிய மக்களுக்குத்தான் தெரியும்போல இருந்தும் மனிதா்களை நம்பவேண்டுமே தவிர சி.சி.டி.வி கேமிரவை நம்பவேண்டியதில்லை அது தேவையும் இல்லை.

– முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M