Newskadai.com
தேர்டு ஐ லைஃப் ஸ்டைல்

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

Short Story Kaliyana Perumal copy
Share this:

சிலு சிலு வென மழைத்தூரல் பெய்துக்கொண்டே இருந்தது. அடாத மழை பெய்து கொண்டு இருப்பதனால்  குடிசை வீட்டில் மஞ்சுகளில் சொட்டு சொட்டாக ஒழுகும்   மழைத்தண்ணிக்காக பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவள் வீட்டின் முன்பு நச நசவென கால் வைக்கவே கூசும் அந்த அளவுக்கு மழையின் அலங்கோலத்தை காண முடிந்தது. பக்கத்துவீட்டுக்காரா்கள் வந்ததும் போனதுமாக இருந்தார்கள். சொந்தக்காரா்களுக்கு ஆள அனுப்பி வந்துனுகிறாங்க என்று யாரோ சொல்லிக்கொண்டிருக்க பதற்றம் பத்திக்கொண்டது முத்தமாவுக்கு.

“வயித்திலேயே குழந்தை தலை திரும்பிடுச்சாம்” அதனால, அவள் உயிர் பிழைப்பது கஸ்டம்தான் மருத்தவச்சியும் கைய்ய விரிச்சிட்டா எல்லோரும் நம்பிக்கை இழந்துட்டாங்க, உங்க குல தெய்வத்தை வேண்டிக்குங்கப்பா என்று சொல்லிட்டு மழைக்காக  மஞ்சுவீடு ஓரமா தின்னையல குந்திக்குன்னு வலது கன்னத்தல கை வச்சிக்கிட்டு, அவள் வேதனையை பாத்து தான் வானமே அழுகிற காட்சியை கண்சிமிட்டாமல் நின்னாங்க அவ சொந்த பந்தங்க எல்லாம்.

Kaaliyana perumal

இந்த சமயத்தல கூட, கட்சி கொடின்னு  ஊதாரித்தனமா எப்புடி திரிஞ்சினு கீராம்பா அந்த வீராசாமி என்று பொண்வீட்டாரும் மத்தவங்களும் திட்டி தீத்தார்கள்.

அந்த கட்சியில வீராசாமி சம்பாதித்தது ஒன்னும் இல்ல என்றாலும் கூட, அவன் பேர  சொன்னால் போதும் அந்த மாவட்ட கட்சி தலைவருக்கு தெரியும். கட்சி தெடங்கின நாள் முதலா அந்த கட்சிக்காக தீராத உறுப்பினராக இருக்கிறான். அவன் லட்சியமே செத்த பின்னாடியும் தன்னுடைய குழிமோட்டுல அந்த கட்சி கொடியை கட்டி பறக்கவிடனும் அந்த அளவுக்கு பைத்தியம்மா இருப்பான்

நாளைக்கு வேற ஓட்டு என்றாங்க பூத்த பாத்து எண்ணிக்கப்ப அவன் அங்கு இருக்கனுமுன்னு அவங்க தலைவரு சொல்லிட்டாரு. அதனால தான் அவன் அங்கு இல்லன்னு அவங்க கட்சி பிரதிநிதி விளக்கமா சொன்னாரு. என்னதான் கட்சி தொண்டனாக இருந்தா கூட இப்படியா கீரது. பொண்டாட்டி நிலைமையை பாத்தீயா என்று மாமனார் மிகவும் கேவலமாகத் திட்டி,

இந்த மாதிரி சமயத்தல பொண்டாட்டி கூட இருந்தா அவளுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். தருதல பைய யாருக்காகவோ போயி உழைக்கிறானே தவிர தன் குடும்பத்த பாக்கனும் தோனலையே, அவன சொல்லி குத்தமில்ல ஏன்னா அவன் குடும்ப வகரா அப்புடி… போய் போய் இவனுக்கு பொண்ணு கொடுத்தேன் பாரு என் பொண்டாடி சான்ட குடிச்சவன் என்னை செருப்பால அடிச்சக்கனும்..

ஏன் மவ அப்பவே வேணாம் படிக்கனும் சொல்லுச்சி நான் தான் புத்திக்கெட்ட தனமா படிச்ச புள்ளையா இப்படி கொண்ணாந்து விட்டுட்டேன். யாரு சொல்லி என்னத்தா சொல்றது எல்லாம் தல விதி, பட்ட காலே படும், கெட்ட குடியே கெடும் என்று சொல்லுவாங்க அதான் கண்ணு முன்னாடியே நடக்குது பாரு எல்லா அந்த காளி ஆத்தாவே பாத்துக்கிட்டும் என்று புலம்பி தீர்த்தான் முத்துமாரியின் அப்பா..

அப்பாவின் புலம்பலே இப்படின்னா.. பொண்ண பெத்தவ எப்படின்னு சொல்லவ வேணும்..,

அட பாவி மவனே.. பொத்தி பொத்தி வளத்த என் புள்ளைய இப்படி பண்ணிட்டியே.. கட்சின்னு திறிர இவனுக்கு எதுக்கு பொண்டாட்டி குடும்பம்ன்னு…

காளியாத்தா என் புள்ளக்கி நல்ல படியா குழந்த பொறந்திட்டா காது குத்தி கடா வெட்டி உனக்கு பொங்க வைக்கிறேன் எம்மா என்று மடியேந்தி பிச்சை கேட்டாள் முத்துமாரியின் தாய் தாயம்மா…

எப்படியாவது தன்னுடைய கட்சி ஜெயிச்சா கெடா வெட்றனு காளியம்மாளுக்கு தனது வேண்டுதல கொட்டித் தீர்த்தான் வீராசாமி.

இப்படி ரெண்டு பேரும் காளியாத்தா மேல நம்பிக்கை வச்சியிருக்காங்க.. எப்படியோ காளியாத்தாலும் ரெண்டு பேரின் புகாரை நடுவுநிலைமையோடு தீர்ப்பு கொடுத்தது போல,  அவா்கள் வேண்டிக்கிட்ட படி அவன் கட்சியும் மிக பிரமாண்டமாக ஜெயிச்சிடுச்சி குழந்தையும் சுக பிரசவமா பிறந்திட்டதனால, வெற்றி களிப்பில் ஆர்ப்பரித்தான் வீரசாமி. வருடங்கள் உருண்டோடியது.

குழந்தைக்கு 2 அல்லது 3வயசு ன்னு ஆயிடுச்சு அதனால தாயம்மா கிழவி தெய்வ குத்தமாகிடும் அந்த காளியாத்தாளுக்கு கடன செஞ்சிடம்னு புலம்பிக்கொண்டே இருப்பாள். அதனால கடன உடன வாங்கி அந்த காளியம்மா கடன அடச்சிடுனும் என்று பொண்டாட்டி முத்துமாரிகிட்ட சொல்லிக்கொணடிந்தான் வீராசாமி. அவளும் பணம் திரட்டும் முயற்சியில இறங்கிட்டாள் பணத்த எங்கு கேட்டும் கிடைக்கல.  கழுத்தும் காதும் கூட வெறிச்சோடி  இருக்கு. அடகு வைக்க கூட எதுவும் இல்ல. உசிர கொடுத்த காளியம்மாவுக்கு கடன அடைக்க  பக்கத்து வீட்டுக்காரங்கிட்ட நூத்துக்கு பத்துருபாயின்னு கடன் கேட்டும் கிடைக்கல..

அவனுக்கு ஒரு யோசனை வந்துச்சு வெளி ஊர்ல போய் எப்படியாவது  சம்பாதிச்சு குலத்தெய்வம் கடனை அடைக்க வழித்தேடி குடும்பத்தோடு புறப்பாட்டான் வீரசாமி. ஒரு வருசத்துக்கு அப்புறம் வயித்த வாய கட்டி சம்பாதித்த பணத்தை கொஞ்சம் எடுத்து கொண்டு காளியாத்தாளுக்கு நேர்த்தி கடனை அடைக்க தனது சொந்த ஊருக்கு திரும்பினான்.

பஸ்ல ஜன்னல் ஓரமா சீட்ட புடிச்ச உட்கார்ந்தான். வருகிற வழியிலேயே அவனது கட்சிக்காக பாடுபட்ட தலைவா் படத்தை போஸ்டர்ல்ல ஒரு வழிப்பாதையை ஏழு வழி பாதையாக மாற்றிய தலைவா் என்ற வாசகத்தை படித்தவுடன் உள்ளம் மகிழ்ந்து பழைய நினைவுகள் அவனுக்குள் ஓடின.. அவன் வந்து சேர வேண்டிய இடம் வந்தது.

இறங்கினவன் சுத்தி சுத்தி பார்க்கிறான். தனது கிராமத்தை காண்பதற்காக அவனது கண்கள் ஏதோ தொலைந்து போன ஒன்றை தேடுவது போல அங்கும் இங்குமாக அலைமோதியது. எல்லாம் நகரமயமாக்கப்பட்டு ஒரு வழிப்பாதை நெடுஞ்சாலையாக காட்சியாக மாற்றப்பட்டிருந்தது. மாறி வந்துட்டோமோ என்று தனக்குள் நினைத்து விசாரித்து பார்க்கிறான். தனது கிராமம் தான் நகரமாக மாறியிருப்பது அதுவும் தனது கட்சி தலைவா் பதவி ஏற்றதும் இத்தகைய மாறுபாடு வந்தது என்றறிந்ததும் அவனது உள்ளம் கலங்கியது.

அவன் தனக்குள்ளே அடுக்கு மாடி கட்டிடங்களை பார்த்து கொண்டே…. பேய் புடுச்சிகிட்டா நல்ல அமாவாசை நாள்ல இரவு 12 மணிக்கு பேய்யை முடுக்கிக்கிட்டு போய் ஒன்டிய புளியமரத்துல, தலைமயிர கொத்தோட புடுச்சி அச்சிட்டு வருவாங்கலே இனிமேல என்ன செய்வாங்க… அதுவும் அந்த புளிய மரம் பக்கத்துல கொஞ்சதூரத்துல தான் பெரியாண்டவ மரம் இருக்கும் அதல எப்பபாரு மஞ்சள் பூசி பொட்டு வைத்திருக்கும் அங்க தான் திருவிழா செய்யறதுன்னா செங்குந்தா் முதலியார் ஆளுங்க விழா எடுப்பாங்க, அதுவும் கொஞ்சம் பக்கத்துல வௌ்ளால கவுண்டா்களுடைய குலத்தெய்வம் உட்டகாட்டு வேடியப்பன்னு இருக்கும்.

ம்…… என்று பெருமூச்சை விட்டுக்கொண்டு கடைசியாக ஒரு கட்டிடத்தை தொட்டு இங்கு தான் நம்ம குலத்தெய்வம் காளியம்மாசாமி இருக்கும் புலம்பி கொண்டே ஒரு பைத்தியக்காரனைப் போல நடந்த வீரசாமியை தட்டி, ‘என்னங்கா…’ என்று மெல்லிய குரலில் கூப்பிட்டு நிதானத்துக் கொண்டு வந்தாள் முத்துமாரி எங்க நம்ம நேர்த்தி கடனை செலுத்த என்று கேட்டாள். அதற்கு அவன் கொற்றவையே…கிளம்பிட்டா… என்றான்

அதனால என்ன நமக்கு தான்  உழைப்பு இருக்கு வேறு ஊர்ல போய் பாத்துக்கலாம் என்று சொல்லிக் கொண்டே குடும்பத்தோடு நடக்க ஆரம்பித்தார்கள்…

மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தேடி?…

– முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!

NEWSKADAI

சிறுகதை : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்..!

NEWSKADAI

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI