Newskadai.com
தேர்டு ஐ லைஃப் ஸ்டைல்

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

Short Story Asura padai copy
Share this:

யார் யாருக்கோ ஊர் ஊா்ரா போய் மேளம் அடிக்கிறோம் நம்ம சனத்துக்காக ஒழைச்ச தாத்தாவுக்காக அடிக்கனுன்டான்னு தோழன் சொன்னான்.  நம்ம கொண்டாட்டத்துக்கு  அடிடா மேளத்தன்னு சித்தன் கத்தினான். இளைஞா்கள் நடனமாடிக்கொண்டு வந்தார்கள். மாலையும் கையுமா திரிஞ்சாங்க ஊரே ரணகளபடுத்தினாங்க  என்னான்னு மக்கள்  கேட்டதுக்கு நம் ஊர்ல நல்லது நடக்கபோகுதுன்னு சொன்னாங்க போர்ட இரும்புல செஞ்சிருந்தாங்க இரண்டா பக்கமும் இரண்டு இரும்பு கம்பத்த நட்டு அதுக்கு கலா்காகிதம் ஒட்டினாங்க, இரும்பு கம்பத்திலிருந்து வீட்டு கூரைக்கு கொண்டு போய் கட்டினாங்க. என்னான்னு பாத்தா  இளைஞா் மன்றம் ஒன்னு திறக்கப்போறோம்ன்னு சொன்னாங்க அதுல யார் தலைவா், செயலா், பொருளாளா்ன்னும் யார் உறுப்பினா்ன்னு தோ்தெடுத்தாங்க. கௌரவத்தலைவரா நம்ம கருப்பு தாத்தாதான் இருக்கனும் அவா்தான் இந்த போர்ட வந்து திறக்கனும்னு சொல்லிட்டாங்க தோழா்கள்லாம்.

கிழவன் எப்ப பொறந்தான்னுகூட தெரியாது. யாரும் அவ்வளவு விவரமா எழுதிவைக்கல ஆனா தன்னுடைய வலது கையில புத்தா் முகத்த பச்ச குத்தியிருப்பான், கேட்டா எங்க முன்னோர்கள் புத்தர்கிட்ட இருந்தாங்க எங்க தாத்தாகூட புத்தர கும்பிட்டாரு அதனால நாங்க புத்தர பச்ச குத்திருக்கேன்னு கிழவன் சொல்லுவான். இந்த கிழவனுக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு, உண்மை, தா்மம்ன்னு வாழ்க்கையை நடத்தியவன்.

முகம்தான் கருப்பா இருக்கும் ஆனா அவன் மனசு பருத்தி பூ போல  கள்ளம், கபடம் இல்லா சிரிப்பு, யாருடைய வாழ்க்கையும் மனசு அளவில் கூட கெடுத்ததில்ல அவருக்கு அழகே அவா் மனசுதான்னு ஊா்ல பேசிக்குவாங்க.

ravanan asurapadai

இப்பலந்தாந்தான் மினி லாரி இருக்கு. மாட்ட ஏத்தினுபோறத்துக்கு முன்ன காலத்தில எல்லாம் அந்த வசதி இல்ல மாடு ஓட்டினுபோகறதுக்கு கருப்பன்தான் சரியான ஆளு திருப்பத்தூா்ல இருந்து திருவண்ணாமலை வரை நடந்தே ஓட்டிக்கினு போகனும்மாம்  ஒரு ஜத மாட்டுக்கு 5ரூபா கொடுப்பாறாம் பாய்,  பாய்கிட்ட பாய் கொஞ்சம் சேத்து கூலி கொடுங்கன்னு கேட்ட “முடிஞ்சா பாரு, இல்லன்னா நான் வேற ஆள பாக்குறன்ன்னு“ பாய் கராரா சொல்லிடுவாரம், வறுமையான காலம் என்பதால கருப்பன் குடும்பத்துக்காக கொடுக்குற காச வச்சி வாழ்க்க நடத்தினான். கொழந்தையம்மாளுக்கு கொழந்தை இல்ல ஆனா கொழந்தையம்மா எப்பவும் சொல்லுவா எனக்கு கொழந்தை என் கருப்பன்தான்னு ஊரே சொல்லிட்டு திரிவா அதகூட கிழவன் விழாவா கொண்டாடினான்.

கருப்பன், தோழன், சாது, கொழந்தபையன்ன்னு நாலுபேரும் ஒரு ஊர சேந்தவங்கதான் சாவுன்னு வந்துட்டா கருப்பன் மேளம் (பலகை) அடிப்பான், அவன் கையில சொல்குச்சியும், அடிகுச்சியும் சும்மா நின்னு விளையாடும் ராத்திரிபூறான்   அடிப்பான், தோழன் சரபுர சட்டிதான் போடுவான், சாது கால்ல சலங்க கட்டிக்கின்னு வாத்துகாசு வாங்கிட்டு துடும்புபோடுவான், கொழந்தபையன் தோல்தான் அடிப்பான், ஊா்ததலைவா் இந்திரன் சாவுக்கு வருபோது மக்கள்ள மாரியாதை கொடுப்பாங்க வெள்ளை வேட்டி வெள்ள சட்டை மினுமினுன்னு இருக்கும் கல்யாண வீடுடா இருக்தாலும் சாவுவீடா இருந்தாலும் ஒரே மாதிரிதான் உடுப்பில் வருவாரு சாதியிலும் ஒசந்த சாதி அதனாலத்தான் அப்படி ஒரு மாரியாதை அவருக்கு.   ஒரு தடவ கருப்பன் கூட இந்திரனுக்கு எதிரா தோ்தல்ல போட்டி போட்டிருக்கான்.

தலைவா் வந்துட்டாருன்னு தோழன் சொன்னவுடனே இந்திரன் தன்னுடைய பாக்கெட்டிலிருன்து 100 ரூபாய் எடுத்து கொடுத்தான் உடனே சாது வாத்த ஆரம்பிச்சான் ஆஜிபுஜாலே நாட்டுக்கு நாடு மகாநாடு இன்னிக்கு பாக்கபோற முக்கத்த என்னைக்கு பாக்கபோறன்னு நம் தலைவா் ஆட்ட காருக்கு 500ன்னு  செட்ஜே செடாங்கன்னு வாத்தி முடிச்சான்.   சாவுவூடா இருந்தா கொண்டாட்ந்தான் இவங்களுக்கு சாவுல கெடக்கிற சாராயத்தை, வாத்துல கிடைக்கிற வாத்துகாசு எல்லாத்தையும் சமமா எடுத்துக்குவாங்க நாலுபேரும்.

சில நேரங்கள்ல சாதி எப்படி பிரிஞ்சிச்சுன்னு சொல்லுவாரு கருப்பன். இங்லீஸ்காரன் முதல்ல யாரு முல்ல யாருன்னு கேட்டானாம் உங்காந்தினுருந்தவங்கல்ல நான்தான் முதல் நான்தான் முதல்ன்னு சொல்றதுக்கு பதிலா நாங்கதான் முதலியாரு நாங்கதான் முதலியாருன்னு சொன்னாங்கன்னு சொல்லுவாரு, அப்படி சொல்லிட்டு எழுந்தவங்கள வெள்ளக்காரன் சிட்இயா் சிட்இயன்னு சொல்லுவான் அப்படி உங்காந்தவங்கள்லாம் நாங்கதான் செட்டியார் செட்டியார்னு உக்காந்துட்டாங்க அந்த காலத்துல யாருக்கும் படிப்பு அறிவு இல்லாத இருந்தது. பலபேருக்கு இங்கிலீஸ் தெரியாததுதால இன்னும் சில சாதிங்க நாடார், கவுண்டா், நாய்கா், அப்படிதான் பிரிச்சான் இங்கிலீஸ்காரன்ன்னு வாய்விட்டு சிரிச்சிட்டு சொல்லுவாரு. எங்கல மட்டும் எலவுசேதி, சொல்றதுக்கு அப்படியே விட்டுட்டான்.

 ஒத்த ஆளா நின்னு மாட்டை கீழதள்ளி லாடம் அடிப்பாராம் அப்படி ஒரு பலசாலி அந்த கருப்பன்னு சொல்லுவாங்க ஆனா கொழந்தையம்மா இறந்தபிறகு தனியான இருந்த மனுசன் இந்த மக்கள்ளா ஏன் இப்படி இருக்காங்கன்னு நினைச்சி, காமெல்லாம் பட்டினி, வீடு, இல்ல எப்பபாரு கஸ்டம், நிலம் இல்ல வெள்ளகாரங்க கொடுத்த நிலத்த பறிச்சிட்டாங்க ஏதோ ஓட்டு போட்றதுக்கு உயிரோட வச்சிட்டு இருக்காங்க அதுவும் இல்லன்னா இத்தன காலத்துக்கு கொன்னு இருப்பானுங்க எங்க வாழ்க்கையே நாசமாயிடுச்சி  நாய்ங்க எப்படி வாழ இடம் இருக்குமே அப்படி இந்த ஊரு இருக்கு. இது எல்லாந்தான் மாறனுன்னு மனசுக்குள் யோசிச்சிருந்தான் கருப்பன்.

ஒருநாள் மக்கள் எல்லாம் கூட்டமா இருந்தாங்க என்ன இங்க கூட்டமா நிக்கிறாங்கன்னு கேட்டத்துக்கு நாங்கள்ளாம் அம்பேத்கரை பாக்கபோறம்ன்னு சொன்னாங்க உடனே நானும் வரேன்னுட்டு கூடவே கிளம்பிபோய்ட்டான் இந்த கருப்பு கிழவன்.

அம்பேத்கா் கே.ஜி.எப். வந்திருக்கும்போது போய் பாத்துட்டு வந்த ஒத்த மனுசன் இந்த கருப்பன்தான். அம்பேத்கரையே கிட்ட நின்னு பாத்துட்டு வந்தவன்னு ஊரே செல்லும், அவர பாத்துட்டு வந்த பிறகுதான் அந்த ஊா் மக்கள் தெருவுல நடக்கிறதுக்கு, கால்ல செருப்புபோடறதுக்கு, தனியான சுடுகாடு செத்தமாட்ட சாப்பிடகூடதுன்னு சொல்லுவாரு இப்படி எல்லாத்தையும் பேராரடிதான் வாங்கினாரு அந்த கருப்பு மனுசன். நம்ம சனங்க போராடினால்தான் கிடைக்கும்ன்னு மக்களுக்கு சொன்னான்.   தோழா்கள் எல்லாமே கருப்பன தோழா்ன்னு கூப்புறதலா அவனுக்கு உள்ளுர நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கன்னு சந்தோஷபடுவான். தோழா்கள் சேந்து இந்த இளைஞா் மன்ற போர்ட நீங்கதான் திறந்து வைக்கனும்னு கத்திகோல் கொடுத்தாங்க  கருப்பன் கத்திரியெல்லாம் தேவையில்ல இதல்லா எங்கிருந்து வந்ததுன்னு சொல்லிட்டு, அந்த போர்டுமேல போத்திருந்த சிவப்பு துணியை கையாலே புடுச்சி இழுத்தான் கருப்பன், அந்த போர்டுல “அசுரப்படை இளைஞா் மன்றம்ன்னு இருந்துச்சி“.

-முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M