Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சிறுகதை : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்..!

Short Story 2 thanneer kudam
Share this:

பொழுது போய் கொண்டிருக்கிறது ஜெய்லா அவளுடைய பிள்ளைகளை டி.வி பாா்த்தது போதும் வந்து சாப்பிட்டு படுத்து தூங்குங்கடி படிக்கச் சொன்னா படிக்க மாட்டினு கீங்க சொன்ன பேச்சி யாரு கேட்குறா இன்னும் அந்த வீணா போனா மனுன வேற காணும். எப்போதுமே சாராய கடையினே கதினு கிடக்கிறான் இன்னும் இந்த மனுன் வீடு வந்து சேரல என்று புலம்பி கொண்டே படக்கையை தயாா்  செய்து கொண்டிருந்தாள் அவள்.

எதுக்குத்தான் இந்த கடவுள் படைச்சானோ எல்லாம் தல விதி என் புருன் ராத்தில மட்டும் தான் புருசனா மத்தபடி சாம்பாந்தியம் ஒண்ணுமில்ல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வீட்டுக்கு வந்து திண்ணையில போய் படுத்துக் கொண்டான் வீட்டுக்காரன். வீட்டு தாழ்வாரத்தில் ஒரு சேலையை போட்டு போத்தி விட்டாள். இரவு போனது 4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்தவளாய் வாசல சாணி தெளித்து கோலம் போடுவதற்காக புலக்கடையை போய் பாக்கிறாள் தண்ணீ சுத்தமா இல்ல அந்நேரத்துக்கெல்லாம் பக்கத்து வீட்டு மயிலா கிட்ட தோண்டியும் சேந்து கயிறும் கடனா வாங்கி சேந்தா போனப்போ அந்த கிணத்துல கொஞ்சம் தண்ணீ  தான் இருந்துச்சு

சொடுக்கி சொடுக்கி இரண்டு தவள நிரப்பி கொண்டு வந்து அத்தனை சுருக்காக சாணி தெளித்து கோலமிட்டு சமையலுக்காக ஒரு ரப்பா் கொடம் தண்ணீா் எடுத்து வைத்துக் கொண்டாள். அவள் பிள்ளைகளை எழுப்பும் போது சுமா காலை 6 மணி இருக்கும் பொிய பொண்ண காலேஜ்க்கு அனுப்பனும் சின்ன பொண்ண ஸ்கூலுக்கு அனுப்பனும் கடைசி பெண்ண பால்வாடிக்கு அனுப்பனும் என்று சொல்லி கொண்டே சமையல் வேலையை முடித்து விட்டாள். மூன்று பொண்ணுகளையும் அனுப்பி வைக்கும் போது 8.30 மணி ஆகிடுச்சு.

பிறகு வௌ்ளிக்கிழமை என்பதால் குளிச்சிட்டு பூசை செய்து விட்டு தான் சாப்பிடுவா. தண்ணீவுத்திகனும் பாக்கும் போது சாியான பாத்ரூம் வசதி இல்ல. ஓலையை கட்ட வேணும் அது யாரு செய்யறது என்று புலம்பி கொண்டே மயிலா வீட்டு பாத்ரூம்க்கு போனாள். இதுல ஜெயிலா 3 பெண்கள் என்பதால மாமியா தான் நமக்கு ஒரு வாாசு வேணும்னு நாலாவதா குளிக்காம இருக்கா. காப்பிணி பெண்ணாக இருந்து கொண்டே இத்தனையும் வேலைகளையும் செய்யனும்.

அப்போது ஆடி மாதம் வேற ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஆடி நின்னு பட்டினி தான் என்று பொியவங்க சொல்லுவாங்க ஏதோ ரேசன் கடையில அாிசி வாங்கி சாப்பிட்டுக்குனு புழப்ப நடத்த வேணும்னு கீது. இதனால் வேலைக்கு ரெடியாக இருக்க வேண்டியிருக்கு. அக்கம் பக்கம் உள்ளவாகளிடம் இன்றைக்கு எங்கு வேலையிருக்கு என்பதை விசாாித்து கொண்டு மூளையை கசக்கி கொண்டு தானும் குளித்து விட்டு வேலைக்கு போக வேண்டியுள்ளது. இத்தன நாளைக்கும் காலையில குளிச்சிடுவா.

புலக்கடை வசதி இல்லாத நால அன்னிக்கு மயிலா வீட்டு பாத்ரூம் வசதியை தேட வேண்டியுள்ளது. மயிலா கிட்ட கேட்டு  உள்ள போகும் அவள் வீட்டுக்காரன் பீமன் என்ன ஜெயிலா குளிக்கவா போற உடம்பு தேயிக்க உள்ள வரட்டுமா என்று கேட்க இல்ல மாமா நான் அக்காவா கேட்டு சொல்றேன் என்று சொல்லி அந்த தடுக்கை எடுத்து மூடி விட்டாள் ஜெயிலா. சும்மா தமாஸ்க்கு தான் கேட்டேன்மா என்று வாய்ஜாலமாக சிாித்து கொண்டே மலுப்பினான் பீமன் இதற்கிடையில் குளித்து தயாராகி வேலைக்கு போகும் போது அவள் புருன் காலையில ஃபுல் போதை என்னடி ஜெயலா வேலைக்கெல்லாம் போற எனக்கு காசு மட்டும் கொடுக்கமாட்டிங்கிற துட்டு கொடுத்துட்டு போடி என்று போக விடாமல் வழிமறித்தான்.

இந்த புண்ட வாயனுக்கு காலத்துக்கும் கப்பம் கட்ட வேண்டியது தான் பொலப்பா போயிச்சு என்று சொல்லி கொண்டே தன் முந்தானையில் வைத்திருந்த  பணத்தை எடுத்து கொடுத்தாள் நாளைக்கு மறுநா பண்டிகை வேற எல்லா செலவழிச்சுட்டா உறம்பற சரம்பற வந்தா என்னத்த செய்றதான் என்று புலம்பி கொண்டே அன்றைக்கு வேலைக்கு சென்று விட்டாள். மறு நாள் தண்ணீக்காக அங்கு இங்குமா அலைந்து திந்து இரண்டு மூன்று குடம் மட்டும் கொண்டு வந்தாள் வீட்டுக்கு. உறம்பறைகள் வந்திருப்பதால் அவளுக்கு தண்ணீ அதிகம் தேவைப்பட்டது.

இந்த பண்டிகை காலத்துல கூட தண்ணி விடமாட்டுனு கிறாம்பாரு அந்த தலைவரு என்று சொல்லி கொண்டிருந்தாள் ஜெயலா. அன்று இளைஞாகள் கலெக்டாடம் மனு கொடுத்திருந்தாகள். இருந்தாலும் தண்ணீ ஊருக்கு வந்து சேரல அதனால் அவாகள் குடத்துடன் சாலை மறியல் செய்ய வேண்டும்னு எல்லோரையும் ஒன்று திரட்டினாகள். ஜெயிலாக்கு இப்போது தான் சந்தோமா இருந்தது. இந்த செய்தி பஞ்சாயித்து தலைவருக்கு போக அவா உடனடியா டேக்கால தண்ணீ கொண்டு வந்து வீதி வீதியா கொடுத்தாங்க அதுல வீட்டுக்கு மூனு கொடம் மட்டும் தான் என்று கறாறா கொடுத்தாங்கா. இப்போது ஜெயிலா வீட்டுக்கு பக்கம் டேக்டா வந்தது.

பிள்ளையையும் குட்டியுமாக பொக்கை வாய் கிழவி முதல் எல்லோரும் ஏதோ வினோதமாக பப்பது போல் அந்த டேக்கடரை பாத்தாகள் அந்த வீதி முழுக்க குடங்களாக நிறைந்திருந்தன. அக்கம் பக்கம் உள்ளவாகள் சண்டை மாய்ந்தாகள் சக்களத்தி சவுத்தி தேவடியா வாடி உன்னை கிளிச்சிட்றன் ன்னு ஏகத்துக்கும் வசை சொற்கள் கேட்டவண்ணம் இருந்தது  ஏகத்துக்கும் பேசிக் கொண்டிருந்தாகள். இந்த கூட்டத்தில் கா;ப்பிணி பெண் வேற எல்லாத்தையும் விலக்கிட்டு முழுகாம இருப்பதால திருவிழாவுக்காக தூரம் போய் தண்ணீ கொண்டு வர முடியாதுஎன்பதால் அங்கேயே 5 குடம் தண்ணீ எடுப்பதற்காக குடத்தை உள்ளே நுழைத்தாள்.

பக்கத்து வீட்டுக்கா மயிலா தமாஸ்க்கு அவள சண்டை வாங்கினா. இவளுக்கோ எல்லோ முன்னாடியும் கேட்டானு எந்த தேவுடியாளும் கேக்கா கூடாது என்று சொல்ல அதுக்கு மயிலா நான் தேவுடியாலா சக்கர நாய்க்கருக்கு நான் தான் முந்தானி போட்டேனா, போய் போய் தண்ணீக்காக முந்தான போட்டவாளா என்று சொல்ல கோவம் பொத்தி கொண்டு வந்தது ஜெயிலாவுக்கு. எந்த தெவடியாலும் நாக்கு மேல பல்ல கொண்டு பேசினா பல்லு மேல குத்துவேன்டி. அதுக்குள்ள மயிலா வுட்டுக்காரன் வெளியே வந்து பாத்தான். அடி தேவுடியா ஒரு புள்ள கூட தாலி கட்டனவனுக்கு பெத்தது கிடையாது.

என் முன்னாடியே என் பொண்டாட்டிய தெவுடியானு கேட்குறியா? வாடா சாண்ட குடிச்சவனே வந்து தொட்டு பாருடா சொல்லி கொண்டே வளம கடாயாட்டாம் வளாந்து கியே தவற பெண்டாட்டியே அடக்க துப்பு கிடையாது இன்னும் ஒரு வெங்காயமும் தொியல என்னடி சொன்னனு இழுத்து ஒரு அறை விட்டான் ஜெயிலா கிழே மயங்கி விழுந்தாள் ஓடி புள்ள தாய்ச்சி வயத்து மேல உட்காந்து தலைய புடிச்சு குமுக்கி தரையில மோத்தனான்.

அவன் பொட்டாட்டி வேற கால புடிச்சு இழுக்குற அந்த இடமே ரணகலமே ஆகிடுச்சு சேறும் சகதியுமா இருந்துச்சு கலுத்த நெறிச்சி அமுக்கினான் அவ மேல உட்காந்ததால அவனால மூச்சு விட முடியல ஊ ஜனங்க நின்னுயிருந்தாங்க மட்ட மதியானம் வெயிலு வேற அவள் பிள்ளைங்க அம்மா அம்மானு கதறி அழ ஜெயலாவுக்கு காக்கா வலுப்பு வந்துச்சு அதோடு ஜன்னி இழுத்து கேட்பாறற்று அதே இடத்தில் உயிரவிட்டாள் ஜெயிலா…..அந்த ஊரே கண்ணீல் தண்ணீராக கலந்து கலங்கி நின்னுச்சி. தண்ணீக்காக தன் உயிரை போக்கி கொண்டாள் ஜெயலா பாவம் என் செய்வாள்…

-முனைவர் ஆதன் குமார்


Share this:

Related posts

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI