Newskadai.com
தமிழ்நாடு

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

Nithiyanandha
Share this:

உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டு பொருளாதாரம், சுற்றுசூழல் கேடு மற்றும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறி  வருகிறநிலையில். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ’கைலாசா’ என்ற நாடு உள்ளதாகவும் அதில் நானே பிரதமர் எனவும், வெகு விரைவில் உலகின் எந்த இடத்தில் ’கைலாசா’ உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று நித்யானந்தா கூறிவந்தார்.

கடந்த வாரம் நித்யானந்தா கைலாசாவின் கரன்சி தயார் என்று தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கி மற்றும் கைலாசா பணம் ஆகியவற்றின் அறிமுகம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிடப்படும் எனவும், வாடிகன் வங்கியை மையமாக வைத்து இந்த கைலாசா வங்கி செயல்படுத்தப்படும். வெளிநாட்டு பரிவர்த்தனைக்காக ஒரு கரன்சியும், உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதோடு 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது என அவர்  வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார்.

nithyanandha

மேலும் படிக்க:http://ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

இதைத்தொடர்ந்து நித்யானந்தா கூறியது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசாவின் புதிய ஐந்து வகையான நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நாணயங்களை கடவுள் விநாயகருக்கு அற்பணிப்பதாகவும் தெரிவித்தார். கைலாசாவின் பொருளாதார கொள்கையில் உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த கைலாசாவின் ரிசர்வ் வங்கியில் தான் எந்த பொறுப்பிலும் வகிக்க போவதில்லை எனவும், கோபத்தின் முன்பாகவும் நெருப்பின் முன்பாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட ரிஷிகளே பொறுப்பு வகிப்பார்கள் என தெரிவித்தார்.  இதை தொடர்ந்து கைலாசாவிற்கென தனி பாஸ்போட் வெளியிடுவது குறித்த தகவலை விரைவில் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

ஈசியா செல்போனிலேயே இ-பதிவு செய்வது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ..!!

NEWSKADAI

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இவர்களுக்கும் முன்னுரிமை… அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆர்டர்..!

NEWSKADAI

கொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

AMARA