Newskadai.com
உலகம்

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

Share this:

பாலியல் வழக்கிற்கு அஞ்சி கைலாசாவில் பதுக்கியிருக்கும் நித்தியானந்தா தினமும் ஒரு வீடியோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசாவிற்கான பொற்காசுகளை வெளியிட்ட நித்தியானந்தா, அத்தனையும் சுத்த தங்கம் என அதிர்ச்சி கொடுத்தார். நித்தி எப்போது கைலாசா என்ற நாட்டின் அமைத்து வருவதாக சொன்னாரோ அப்போதிலிருந்தே அந்த நாட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

Nithyananda
 

 

இந்நிலையில் கைலாசா நாட்டு நாணயங்களை வெளியிட்டு இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நித்தியானந்தாவுக்கே ஓட்டல் அதிபர் ஒருவர் கடிதம் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கைலாசா என்ற நாடு எங்கிருக்கிறது, எப்படி போக வேண்டும் என எதுவுமே தெரியாத நிலையில் அங்கு ஓட்டல் வைக்க அனுமதி கேட்டு ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

 

 

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பேமஸாக உள்ள மதுரை டெம்பிள் சிட்டி ஓட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார். அந்த கடிதத்தில் தாங்கள் சொன்னபடியே கைலாசாவில் தனிநாடு ஆரம்பித்ததோடு அல்லாமல் தனியாக பொற்காசு நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். தங்களது தனித் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்களது கைலாசா நாட்டில் எங்களது டெம்பிள் சிட்டி ஹோட்டல் திறப்பதற்கு தங்களது அனுமதியை வேண்டி காத்திருக்கிறேன். இது உலகிலேயே மிகச்சிறந்த உணவை அங்கு வழங்கி தங்களது கைலாசா நாட்டை மேலும் வனப்படுத்த உதவும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

தாங்கள் எவ்வாறு மக்களை ஈர்க்க பக்தர்களை ஈர்க்கும் புதிய உத்திகளை கையாளுகிறீர்களோ, அதேபோல நாங்களும் மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை என பல யுக்திகளை கையாண்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது பதிலுக்காக காத்திருக்கும் டெம்பிள் சிட்டி குமார் என கடிதம் எழுதியிருந்தார்.

 

 

டெம்பிள் சிட்டி குமாருக்கு கொடுக்குற உறுதி, என்னுடைய அட்மின் வொர்க் பார்க்கும் சன்னியாசிகளிடம் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படி சொல்லியிருக்கிறேன். கைலாசாவை நான் என்று ஓபன் செய்கிறோனோ அன்று உங்களுக்கு தகவல் கொடுக்க சொல்லுகிறேன். உங்கள் கடிதத்தை நான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி நன்றி என பதிலளித்துள்ளார்.


Share this:

Related posts

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M

முற்றும் அமெரிக்கா – சீனா பனிப்போர்… தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு…!

NEWSKADAI

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M