Newskadai.com
தமிழ்நாடு

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

Share this:

திருப்பூரில் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.7.70 லட்சம் செலவு செய்யப்பட்டதாக அந்த தண்ணீர் தொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருப்பூரில் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் மாநகராட்சி சார்பில் பழைய கைப்பிடி பம்ப்பில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு நான்கு இடங்களில் குழாய் பொருத்தி மோட்டார் திட்டு கட்டப்பட்டு 2000 லிட்டர் டேங்க் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Water Tank Report

இதனை திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் நேற்று துவக்கி வைத்தார். இதன் திட்ட பணிகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் அந்த தண்ணீர் டேங்க் மீது மதிப்பீடு ரூ.7.70 என குறிப்பிட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வெறும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி கட்ட ரூ.7.70 லட்சமா என்று ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையறிந்த அதிமுக எம்.எல்.ஏ வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் “நான் திறப்பு விழாவிற்கு மட்டும்தான் சென்றேன். மாநகராட்சி நிதியில் கட்டப்பட்ட இந்த திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்தேன். அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம்” என விளக்கம் அளித்துள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

வைகை எக்ஸ்பிரஸில் தீ விபத்து : திருச்சியில் பயணிகள் அவதி…!!!

MANIMARAN M

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

NEWSKADAI

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN