Newskadai.com
உலகம்

6 அடி சமூக இடைவெளி போதுமா..? ஆராய்ச்சியில் பகீர் தகவல்…!!!

Share this:

COVID-19 கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான நாடுகளில் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப்போய் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு நாடுகள் பட்டியிலில் உலகளவில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.  ஊரடங்கு, சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. 6 அடி சமூக இடைவெளி பின்பற்றினால் தொற்று ஏற்படாது என்று கூறிவந்த நிலையில், தற்போது கொரொனா வைரஸ் தொற்று 6 அடிக்கு மேல் காற்றில் பரவும் என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BUS

ஒருவர் பேசும்போதும், இருமும்போதும், தும்மும்போதும் வெளியாகும் சிறு அளவிலான திரவத் துளிகள் 6 அடி இடைவெளியில் நிற்பவர்களை நெருங்கும் முன்பு தரையில் விழும் என்று இது நாள் வரை நம்பப்பட்டு வந்தது. அதனாலேயே 6 அடி சமூக இடைவெளிப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை தவிடுப்பொடியாக்கும் விதமாக ஏரோசோல்கள் எனப்படும் டைனியர் துகள்களை பற்றி ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

வர்ஜீனியா டெக்கில் வான்வழி தொற்று நோய்களை பரப்புவது குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி லின்சி மார் கூறும்பொழுது, இந்த துகள்கள் காற்றில் பல மணி நேரம் நீடிக்ககூடியது, இந்த துகள்கள் மூலம் கொரொனா போன்ற தொற்று நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் இதனால் எந்த அளவுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் பேசும்போது அதிக இடைவெளி விட்டு நிற்பது மட்டுமல்லாமல் அதிக விழிப்புடன் இருப்பதும் மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Share this:

Related posts

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

உயிர குடுத்தாவது காதல சொல்லிடனும்… நெஞ்சை படபட வைக்கும் லவ் புரபோஷல்… வீடியோ

POONKUZHALI