Newskadai.com
லைஃப் ஸ்டைல்

*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!

Share this:

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன். ஒருநாள் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நான் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.

அந்த உணவகத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன்.

ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார். எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது  உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார். எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.

எனது படை வீரன் என்னிடம் சொன்னான்… அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய் பட்டவராக தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றான்..

மேலும் படிக்க:http://“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

மேலும் படிக்க:http://மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

நான் குறுக்கிட்டேன்… வீரனே, உண்மை அதுவல்ல. உண்மை என்ன தெரியுமா..? நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார் என்னை அடிக்கடி கொடுமைப்படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்… நான் கூக்குரலிட்டு, களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்..

இதே மனிதர், அவ்வேளையில் என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார் இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் பயத்தில் இருந்தார்…

ஆனால் பழி வாங்கும் எண்ணம் எனக்கில்லை.. இப்படிப்பட்ட குணமும் எனதல்ல.. பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி எழுப்பாது. அழித்து விடும்.

அதே நேரம் சில விஷயங்களில் மனிதனின் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கும் என்றார்.  அந்த வரலாற்று நாயகன் வேறு யாருமல்ல… நெல்சன் மண்டேலா!


Share this:

Related posts

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI