Newskadai.com
தமிழ்நாடு

நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

Share this:

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஒரு பெண் திருப்பத்தூரில் உள்ள தனது உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களை பார்த்துக்கொள்வதற்காக வடபழனியிலிருந்து திருப்பத்தூருக்கு செல்ல இ-பாஸ் அப்ளை செய்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலா மூவாயிரம் வீதம் ஒன்பதாயிரம் ரூபாய் கட்டி தனது குடும்பத்திலுள்ள மூவருக்கும் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அன்று மாலை அதன் ரிப்போர்ட் வந்தது அதில் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக பாசிடிவ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Corona

 அப்போது அந்த ரிப்போர்டை ஒப்படைத்த வந்த மருத்துவமனை ஊழியரோ விருப்பமிருந்தால் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண்மணிக்கு தனியார் மருத்துவமனை மீது சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் மருத்துவமனையின் நடவடிக்கையால் குழப்பமடைந்த குடும்பத்தினர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனை முடிவு தெரிய 24 மணி நேரம் ஆகும் என்பதால், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஜவஹர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மறுநாள் கைக்கு வந்த அரசு மருத்துவமனை ரிப்போர்டில் குடும்பத்தினர் 3 பேருக்கும் தொற்று இல்லை என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் பணத்திற்காக தனியார் மருத்துவமனை செய்த காரியத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது அனைவரும் வீட்டில் இருந்தாலும், தொற்றே இல்லாதவர்களை சிகிச்சை மையத்தில் தங்கவைத்ததால் தொற்று பரவி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நோயற்றவர்களை நோயாளியாகவும் நோயாளிகளை நோயற்றவர்களாகவும் கூறும் கொரோனா பரிசோதனைகள் ரிப்போட் பெரும் சோதனையாக உள்ளது.


Share this:

Related posts

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M