Newskadai.com
தமிழ்நாடு

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

Share this:

நாளைய தினம் (செப் 13) NEET நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்காக தயாராகி வந்த மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா(19) என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவராகும் கனவிற்கு நீட்தேர்வு பெரும் தடைக்கல்லாக இருப்பது மீண்டும் மீண்டும் நிருபணம் ஆகிறது. மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் முதல் முறை நீட் தேரில் தோல்வி அடைவதும், பின்னர் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்று மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதும் நடைமுறையில் உள்ள யதார்த்தம்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர்  முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதி துர்கா (19). மருத்துவராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த ஜோதி துர்கா கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தோல்வி அடைந்த நிலையில் இவ்வாண்டு நீட் தேர்வில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இரவு பகலாக படித்து வந்துள்ளார்.

பெற்றோரும் அவருக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் படித்துக்கொண்டிருந்த மகளுக்கு டீ கொடுப்பதற்காக அவளது அறைக்கு சென்ற தாய், மகள் ஜோதி துர்கா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த புதுக்கோட்டை, களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்மா என்ற மாணவியும், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவனும்  தேர்வு பயத்தில்  கடந்த வாரத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நுழைவுத் தேர்வுகளும் அதன் மதிப்பெண்கள் பட்டியலும், மிகமிகக் குறைந்த மதிப்பெண்களில் பறிபோகும் மருத்துவ கனவுகளும் மாணவர்களுடைய மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு மன உளைச்சலால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


Share this:

Related posts

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் 3,007 போலீசார்… உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்…!

NEWSKADAI

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

MANIMARAN M