Newskadai.com
இந்தியா

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!

Share this:

வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜே.இ.இ. தேர்வுகளும், 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம், பொது போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் மூடல் போன்ற பல கட்ட நடவடிக்கைகளில் மக்கள் பெரிதும் பாதித்துள்ள நிலையில் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டு 2546 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைப்பெற்றது. இந்த ஆண்டு 3843 தேர்வு மையங்களாக அதிகரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மாணவர்கள் https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


Share this:

Related posts

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

உச்சகட்ட பாதுகாப்பில் அயோத்தி… களைகட்டும் ராமர் கோயில் பூமி பூஜை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிலும் குறையாத நெருக்கடி: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்…!!!

MANIMARAN M

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M