Newskadai.com
இந்தியா

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

Neet
Share this:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதை கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்க்கான ஜே.இ.இ போன்ற நுழைவுத்தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்வதால் இந்த நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்குமாறு சுப்ரிம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என தேசிய திறனாய்வு மையம் NTA தெரிவித்துள்ளது. ஜே.இ.இ தேர்வுகள் திட்டமிட்டபடி 01.09.2020 முதல் 06.09.2020 வரை தேர்வுகள் நடக்கும் என அறிவித்துள்ளது. இதற்கான நுழைவுசீட்டு இனையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வுக்கு விண்ணப்பித்த 8,58,273 பேரில் இதுவரை 6,49,223 பேர் நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 142 பேர் பல்வேறு காரணங்களுக்காக தேர்வு மைய மாவட்டத்தினை மாற்றுவதற்காக பதிவு செய்துள்ளதாகவும் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று நீட் தேர்வுகான தேதி 13.09.2020 அன்று நடைபெறும் என தெரிவித்த தேசிய திறனாய்வு மையம் விரைவில் தேர்விற்கான நுழைவுசீட்டு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI

அதிதீவிரமடையும் யாஸ் புயல் – 90 ரயில் சேவைகள் ரத்து..!

MANIMARAN M

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

MANIMARAN M

கேரளாவில் கடும் நிலச்சரிவு… 80 பேர் மண்ணில் புதைத்திருக்கலாம் என அச்சம்…!!

AMARA

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI